பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் காட்டும் உளப்பாங்கு தலைசிறந்த கவிஞர்களிற் சிலர் மக்களின் உளப்பாங்கை நன்கு அறிந்திருந்தனர் என்பது சில காவியங்களால் விளங்குகின்றது. கம்பர் தாம் எழுத எடுத்துக்கொண்ட காவியத்தில் வரும் மக்களுடைய மனப்பான்மையினை நன்கு அறிந்தவர் என்பதற்குத் தசரதன ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். - - தசரதன் வயதான காலத்தில் அவைகூட்டித் தன் மகன் இராமனிடத்தில் அரசினை ஒப்படைத்துவிட்டுக் காட்டிற்குச் செல்ல எண்ணினன். அதனை வசிட்டர் முதலியோர் ஒப்புக் கொண்டனர். இராமனே அழைத்து அவனிடம் தன் கருத்தினைத் தெரிவித்து அவன் இசைவினையும் தசரதன் பெற்றுவிட்டான். பிறநாட்டு அரசினர்க்கும் இராமனுக்குப் பட்டம் குட்டுவிக்கும் செய்தியைக் குறித்து ஒலே எழுதி அனுப்பிவிட்டான். ' இந்தச் சூழ்நிலையில், கைகேயி பெற்றிருந்த பழைய இரண்டு வரங்களில் ஒன்றினல் தன் மகன் பரதன் அரசு எய்துதல் வேண்டுமென்றும்; மற்ருெரு வ ரத் தி ல்ை இராமன் காடடைதல் வேண்டுமென்றும் கூறியபொழுது தசரதனல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தான் கருதிய எண்ணம் குலைந்துவிட்டதே என்று மிகவும் உளேகிருன். கைகேயியோ எவ்வாருவது தன் மகனுக்கு அரசினைப் பெற்று இராமனே காட்டினின்றும் கடத்த வேண்டும் என்ற எண் ணத்தை வலுவாகக் கொண்டு விட்டாள். அதனால், தசரதன்