பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்ப்ன் காட்டும் உளப்பாங்கு 3% 'தந்த வரத்தைத் தவிர்க என்றல் கல் அறமாமோ? என நினைவுபடுத்துகிருள். வாய்மை என்ற சொல் கேட்டவுடன் மீண்டும் மண்ணிடை விழுகிருன் அடுத்த நொடியில் அவளேநோக்கி வெகுளுகிருன். எனக்கு மாத்திரம் அறத்தை நினைவுபடுத்துகிருயே; உன்னைப் போல் தான் மகளிர் எல்லாம் முன்னர்க் கணவரைக் கொன்றுகொண்டு இருந்தார். களோ? என்னைக் கொல்கின்ருயே; கொடியவளே: என்று திட்டுகிருன். ஒரு பெண்ணுல் எனக்கு முடிவு வந்தது என்று உலகத்தில் சொல்ல்ப்படுமே..அ. பொருந்துமா?,எனக் கேட்டுப்பார்க்கிருன் இவ்வாறெல் லாம் முன்னுக்குப்பின் பொருந்தாத சொற்கள் பல் சொல்லி இன்னலுறுகிருன் மீண்டும் புரளுகிருன். அவன் கொன கோபத்தால் சுரப்பிகள் வேலைசெய்யவில்லை. கைகேயி அவன் புரளுகிறபொழுது, அவனே நோக்கி 'முன்னல் தந்த இரண்டு வர்த்தையும் பெற்ருல் சரி; இல்ல்ை யானல் உயிரைப் போக்கிக் கொள்வேன்' என்று அச்சுறுத்து கிருள். உண்மையைப் பாதுகாக்கத்தன் உயிரை மாய்த்துக் கொண்ட சிபியினுடைய செய்தியை நினைவுபடுத்துகிருள். 'வரத்தைக் கொ டு த் து விட்டு ப் பிறகு வருத்தப் படுவதில் என்ன பயன்? என்று கேட்கிருள். இங்கிலையில் 'ஈந்தேன் ஈந்தேன். இவ்வரம் என்று கடைசியில் தசரதன். கூறிவிடுகிருன். இராமன் காட்டிற்குப் போவதில் தசரத னுக்கு விருப்பம் இல்லை. ஆயினும், உண்மையைப் பாது காக்க வேண்டி, சொன்ன சொல்லப் பாதுகாக்க வேண்டி, விருப்பம் இல்லாததொன்றைச் செய்துவிட மனத்தைத் திடப்படுத்திக் கொள்கிருன். இதுதான் தசரதனுடைய மனநிலையை அறிந்து கம்பர் தீட்டியுள்ள ஒவியம். இந்தக் காட்சியில் தசரதன் தன் மகன் இராமன் மேல் வைத்த அன்பு ஒருபுறம் தெளிவாகிறது. மறு. புறம் மனைவிக்குக் கொடுத்த சொல்லைக் காக்கவேண்டுமே என்ற எண்ணம் உடையவனுய் இருக்கிருன் என்பது