பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV வேந்தர்' என்ற தலைப்பில் வெளியிட இருப்பது என்னைப் போல் உள்ள அவருடைய மாணவர்களனைவருக்கும் மகிழ்ச் சியூட்டும் என்பதில் ஐயமில்லை. இந்நூலின் வருவாய் அவருடைய இல்லக்கிழித்தியார் வணக்கத்திற்குரிய திருவாட்டி பெரியநாயகி அவர்களின் கல்வாழ்விற்கு உத வும் என அறிய உள்ளம் பூரிக்கின்றேன். குடியாட்சி உலகிற்கு வேந்தனைப்பற்றிய அறிவு எத்ற்கு என எண்ணத் தோன்றும். தலைவர் ள்வராயினும் அவர் கொள்ளவேண்டிய குறிக்கோளையே செங்கோல் வேந்தர்' என்ற கட்டுரை காட்டுகிறது. தலைமைப் பதவியின் பொறுப் பைக் குன்றின்மேலிட்ட விளக்கெனக் குறிப்பதே செங் 'கோல் வேந்தர் கட்டுரையாகும். 'குறுந்தொகை என்னும் கட்டுரையில் இலக்கியச் சுவைகளே ஆசிரியர் அலகிக் காட்டுவதும், எம்இல் உய்த் துக் கொடுமோ” என்பது போன்ற தொடர்களுக்கு உள் ளத்தைக் கொள்ளை கொள்ளுமாறு அவர் குறிப்புப் பொருள் களேச் சுட்டிக்காட்டுவதும் அவருடைய ஆழ்ந்த புலமையைக் காட்டி கிற்கின்றன. நக்கீரர் கவித்திற்னே ஆராயும்போது இக்காலப் பொதுவுடைமையர் கருத்தை நக்கீரரிடம் அவர் காண விழைந்தமை அவருடைய அரசிய்ல் அறிவையும் ஆராய்ச்சி வன்மையையும் புலப்படுத்தும். ' கம்பர் மக்கள் மனப்பாங்கை அறியும் பெற்றியர்' என அவர் கம்பன் உளப்பாங்கை எடுத்துக்காட்டுவதும், இராமலிங்க அடி களின் ஒருமைப்பாட்டை ஆய்ந்து சுட்டுவதும், மறைமலை யடிகள்ை நிலைகுலையா மலை" என நிறுவுவதும், தாகூரின் கருத்துக்களேத் தமிழ் இலக்கியங்களோடு இணைத்து ஒப்பு நோக்குவதும், பாரதிதாசனின் அழகின் சிரிப்பில் தோய்ந்து புரட்சிக் கருத்துக்களைக் கோடிட்டுக் குறிப்பதும் டாக்டர் அ. சி. அவர்களின் பரந்துபட்ட நுணுக்கமான நுண்ணறி வைப் புலப்படுத்தும். * > . மொழிக்கல் ஒரு புதிய நெறியாகும். அதன் அடிப் படைகளே நுணுக்கமாக, தெளிவாக, அவர் காட்டியிருப்பது