பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகளும் ஒருமைப்பாடும் 43, தெளிவு. அக்கருத்தினை நோக்கினல், பகைவராயினும் அவர்களுக்குக்கூட இன்பம் தர வேண்டுமென்று விரும்பி யவர் அவர் என்பது பெறப்படும். ஆயினும், தம்மை அடுத்த, வர்களுக்கு மிக்க இன்பம் விளேயுமாறு செய்தல் வேண்டு மென அவர் விரும்பினர் என்பதும் உறுதி. உயிர்கள் அனைத்திற்கும் இதம்புரிதல்வேண்டுமென அவர் பாடினர் எனினும், 'என அடுதார் தமக்கெல்லாம் இன்பு தரல்வேண் டும் எனப் பாடினமையின், அவரது உட்கருத்து அறியப் படும். அவ்வாறே, எவ்வுயிரும் இன்பம் அடைதல் வேண்டு' மென்று இன்னேர் இடத்திற் கூறிய அவ்வள்ளலார், "எனே அடுத்தார் சுகம் வாய்ந்திடுதல் வேண்டும்' என்றும் கூறியுள்ளார். இவ்வகையில் திருவருட்பிரகாச வள்ளலார் கவிஞர் இரவீந்தர நாத தாகூரோடு ஒப்புநோக்கத்தக்கவர். 1891 முதல் 1641 வரை வங்காளத்தில் வாழ்ந்த தாகூர் இராம. லிங்க அடிகளோடு நேர்த் தொடர்பு பெறுவதற்கு முன்ன. லேயே மறைந்துவிட்டார் என்ருலும், அடிகளாருடைய கருத்தினை யொத்த சில கருத்துக்கள் தாகூருடையனவாக உள. உலகில் எச்சமயத்தவரும் போற்றும் கடவுள் முடிவில் ஒருவரே என்பதை இவ்விரு பெரியாரும் வற். புறுத்தியுள்ளனர். உலகத்தில் தோன்றிய பல்வேறு சமயப் பெருங்குரவர்களுக்குக் கட்வுள் அருள் கூடியிருக்கிறது என் பதை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். கடவுள் ஒரு, வரே எனினும், உபநிடதம் போன்ற இந்தியா தேசத்தின் ஆன்மிக நூல்களினல் கடவுளே அடைதற்கு வழி சொல்லப் பட்டிருக்கிறவாறு மேலைநாட்டு ஆன்மிக நூல்களிற் சொல் லப்பட்டிலது எனக் கவிஞர் இரவீந்தரநாத தாகூர் கூறியும் எழுதியும் வந்துள்ளார். அவ்வாறே, இராமலிங்க அடிக ளும் எல்லாச் சாதியினரிடத்திலும், எல்லாச் சமயத்தினரி. டத்திலும், எல்லா மதத்தினரிடத்திலும் பொதுமை நோக்கு டையவராக இருந்தாரேயாயினும், தமிழ் மொழி வழியாகத் தான் சாகாக் கல்வி சிறப்பாக அறியப்படும் என்றும், ஏனைய மொழிகளைக் காட்டிலும் தமிழ் மொழிக்குச் சிறப்பு.