பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலைகுலையா மல்ை தன்னேர் இல்லாத தனிப்பெருந் தலைவராய் விளங்கி மக்கட்குப் பெரிய அறிவுப் பணியாற்றிய மதிப்பிற்கு செம்மல் மறைமலை அடிகளார் தம் வாழ்நாளில் தமி களுக்குச் சிறந்த நல்லறிவு கொளுத்தி வாழ்ந்தவர் என்பது தமிழ்நாடு அறிந்த உண்மை. அவர் 1950 செப்டம்பர் 15 ஆம் தேதி மறைந்தார். 15-7-1876இல் தோன்றிய அவர் ஏறத்தாழ 74 ஆண்டு உயிருடன் இருந்த காலத்தில் தமிழ் மொழியின் அருமை பெருமைகளையும் பண்டைத் தமிழ்மக் களின் உயர்வினையும் எடுத்துக்காட்டி, இக்காலத் தமிழ்மக் கள் சீர்திருந்த வேண்டிய முறைகளை விளக்கி வந்தார். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகச் சில ஆண்டுகள் அவர் துலங்கியபொழுது (காவலர்) சோம. சுந்தரபாரதியார், (டாக்டர்) பி. சுப்பராயன், டி. கே. சிதம்பர காத முதலியார் போன்றவர்கள் அடிகளாரின் சிறந்த மாணவர்களாய் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'பரிதிமாற் கலைஞர்” என்று தம்முடைய பெயரைத் த. தமிழ்ப் பெயராக மாற்றிக்கொண்டு தமிழ்மொழியிடத்து மட்டிலாப் பற்றுக்கொண்டு வாழ்ந்த திரு வி. கோ. சூரிய நாராயண சாத்திரியாரோடு கிறித்தவக் கல்லூரியில் உட் னிருந்து தமிழ்ப்பணியாற்றும் வாய்ப்புப்பெற்ருர் மறைமல்ை அடிகள். "கீழ்நாட்டு மக்கள் வசியம்’ (The Oriental Mystick Myna) என்ற தலைப்பிலும் "அறிவுக் கடல்’ (The Ocean