48 செங்கோல் வேந்தர் of Wisdom) என்ற தலைப்பிலும் இரண்டு ஆங்கில இதழ்களே வெளியிடும் பொறுப்பேற்று. அவ்விதழ்கள் வாயிலாகத் தமிழ் அறியா மக்களுக்குத் தமிழ் மொழியின் மேன்மைபற் றியும் தமிழ் மக்களின் உயர்வுபற்றியும் எடுத்துக் கூறிவந்த பெருமை மறைமலை அடிகளைச் சாரும். மறைமலை அடிகள் வேதாசலம் என்ற இயற்பெயர் உடையவர். அவர் தம் பெயரைத் தனித்தமிழ்ப் பெயர் ஆக்குதற்காக மறைமலை அடிகள் என மாற்றி வைத்துக் கொண்டார் என்பது பலர் அறிந்த செய்தி. அவ்வாறு மக்கள் பலரும் தத்தம் பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுதல் வேண்டு மென்பதை எதிர்பார்த்தவர். தமிழ்நாட்டில் பிறமொழிக் கலப்பினல் தமிழர்தம் பண் டைய பெருமிதம் குலைந்து விட்டதென்றும், அதனை மீட்டும். நிலையில் நிறுத்துதற்குத் தக்க வழிகள் காணவேண்டு மென்றும் அவர் விரும்பினர். தமிழ்மக்கள் பிற மொழி. களுடைய ஆளுகைக்கு அடிமையாகித் தன்மானம் அற்றவ்ர் களாகிவிட்டது குறித்துக் கலங்கினர். பழைய தமிழகத்தில், அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுற்பட்ட தமிழகத் தில், எல்லாம் தமிழ், எங்கும் தமிழ் என்ற கிலே இருந்து வந்ததால் தமிழ்நாடு மாண்புற்று இருந்ததென்று அவருடைய நூல்களிலும் சொற்பொழிவுகளிலும் எடுத்துக் காட்டினர். ஆட்சிமொழி தமிழாக ஆக்காலத்தில் இருந்த தால் பெருமை குன்ருத நிலையில், தமிழ்நாடு செழித்திருந்த தென்பதை எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தார். அரசியல் வினைமொழி தமிழாகவும், அரசர்மொழி தமிழாகவும், மக்கள்மொழி தமிழாகவும் இருந்தமையால் நாடு பீடும் |றிருந்த நிலையைப் புலப்படுத்தி வந்தார். எட்டிலும் பேச்சி லும், காட்டிலும் வீட்டிலும், இசையிலும் கூத்திலும், மன வினையிலும் பிணவினையிலும் முழுதும் தமிழாக இருந்த காரணத்தால் கிலேயாக இருந்த தமிழர்தம் சிறப்பினே எடுத்து எடுத்துக்காட்டி வந்தார். இடைக்காலத் தமிழ தத்தில் புகுந்த பிற நாகரிகக் கலப்பில்ை, புகுத்தப்பட்ட
பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/57
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
