妾 湖 தாகூரும் தமிழிலக்கியங்களும் கவிஞர் இரவீந்திரநாத தாகூர் அண்மைக் காலத்தில் வாழ்ந்த இந்தியக் கவிஞர்களுள் தலைசிறந்த ஒருவர் என்பது பலரறிந்த செய்தி. அவர் உயரிய பெருங்குடி மரபிற் பிறந்து செல்வச் சிறப்பொடு வாழ்ந்தவர் என்ப்தும், செல்வத்தில் திருக்கிச் செருக்கிவிடாமல் இரக்க உணர்ச்சியொடு மக்கள் அனைவரையும் அன்பினால் அணைத்துத்தழுவும் இயல்பினர் ஆயினர் என்பதும் அவரைப்பற்றிக் கூறத்தக்க சிறப்புக்கள். வைதீகமும் பழமையும். மேலிட்டிருந்த காலத்திலும் இடத்திலும் மக்களிடையே தோன்றிய அம் மாபெரு வீரர் தம் காலத்திய குறுகிய மனப்பான்மைகளுக்கு இடந்தராமல், சில வேளைகளிற் செருக்குற்ற தம் காலத்தவரோடு இகலி அன்பிலுைம் கருணையுள்ளத்தாலும் தம் காலத்தைக் கடந்தவர் என்பது அறியப்படும். அவரோடு ஒத்தகாலத்தில் வாழ்ந்து அவரோடு நேர்த் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் தமிழ்நாட்டுக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் இருந்தாரென்றும், தாகூரின் உயரிய நோக்கங்கள் அவர் மனத்தை ஈர்த்தன என்றும் அறிகின்ருேம், தாகூர் இயற்றிய கட்டுரைகளாகிய 'சப்பானுடைய ஆவி', 'கல்வி கற்பிக்கும் மொழி”. 'ஜாதி", "அடங்கி நட', 'சிறிதும் பெரிதும்' என்ற வற்றை விறுவிறுப்பான தமிழ் நடையில் பாரதியார் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். 'காளிதாசன்” என்ற புனே பெயரி ல் அவர் 1921இல்ேயே இரவீந்திரருடைய பெருமையைப்பற்றித் தமிழ்மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.
பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/64
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
