பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தர்கூரும் தமிழிலக்கியங்களும் 59 என்று அவர் பாடியுள்ளவற்றைப் பார்த்தால் இவை தனி அமைப்புக்கள் என்பதுபோலத் தோற்றும். கவிஞர். இரவீந்திரர், "என் பாட்டில் நீ மகிழ்ச்சி கொள்கிருய் என்பதை அறிவேன். உன் முன்னிலையில் நான் பாடகன் என்ற வகையில்தான் வருகிறேன் என்பதை அறிவேன்’ என்று கூறினர். இதனைக் காட்டிலும் இனிமையாகக் கவிமணி - - - "எத்தி இசை பாடத் தொடங்குவேன் யுேம் அதில் இன்புறுவை என்பதுணர்வேன்' என்று கூறினர். உன்னே ஏத்தி இசையில் பாடத். தொடங்குவேன்' என்றும், "நீயும் அது காரணமாக இன்புறுவாய் என்பதையும் அறிவேன்” என்றும் கவிமணி, பாடியபொழுது, - 'அர்ச்சனை பாட்ட்ே ஆகும், பாடுக” என்று சுந்தரரை நோக்கி இறைவன் கூறியமை அவர் நினைவிற் கட்டாயம் இருந்திருக்கும். கவிஞர் தாகூர்" "உன்னைப்பற்றிப் பாடும் மகிழ்ச்சிப் பெருக்கில் என்ன மறந்து கடவுளாகிய உன்னை நண்பன் என்று அழைக். கிறேன்” எனக் கூறினர். கவிமணி அதனை ஒட்டிப் பாடுவார், - 'நானும் என் களிமயக்கால் நண்பன் என்றே அழைக்கின்றனன், என்னையாள் காதனே! ஞான பரனே! எனப் பாடினர். இவ்வாறு கடவுளே நண்பகைக்கொண்டு: அழைத்தல் என்பது தமிழ்நாட்டிற் புதுவதாக வந்த, கருத்தாக் இல்லை ஆதலாலும், கவிஞர் தாகூரினுடைய "கீதாஞ்சலி’ப் பாடலைப் படித்தபொழுது திருவாசகத்தில் வந்துள்ள மாணிக்கவாசகரின் மாணிக்கவாசகம் கவிமணி யின் கினேவிற்குக் கட்டாயம் வந்திருக்கும் ஆதலாலும், இப்பாடற் பகுதியைத் தேசிகவிநாயகம் எளிய இனிய. வகையில் மொழிபெயர்க்கும் ஆற்றல் உடையவராயினர்.