பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 செங்கோல் வேந்தர் "தோழா போற்றி! துணைவா போற்றி! என்பது ப்ோற்றித் திருவகவல். திருச்சதகத்தில்,

  • மையிலங்கு 5ற்கண்ணி பங்க்னே

வந்தெனைப் பணிகொண்டபின் மழக் கையிலங்கு ப்ொற்கிண்ணம் என்றலால் அரியை என்றுனேக் கருகின்றலேன்’ என மாணிக்கவாசகர் கூறினர். ஒருகாலத்திற் கடவுள் அவருக்கு அரிய்வராக இருந்தார் என்பதும், பின்னர் ஆட் கொள்ளப்பட்ட பிறகு எளியவராகிவிட்டார் என்பதும் இப்பாடற் பகுதியிற் கூறப்பட்டுள்ளன. குழந்தையின் கையின்கண்ணதாகிய பொற்கிண்ணம் குழந்தையின்கையில் இருத்தலால், குழந்தைக்கு அஃது எவ்வள்வு எளிதோஅன் வளவு எளியவர் கடவுள் என்ற கருத்து சொல்லப்பட்டுள் ளது. கடவுள் மனிதனுக்கு எளியவராகிவிட்டாலும், தன் அருமையை அவன் உணராமல் எப்போதாவது இழந்துவிடு விாஞே, ன்ன எண்ணிக் கடவுள் மனிதைேடு சுற்றிக் கொண்டே இருக்கின்ருர் என்ற குறிப்பும் இவ்வித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் கையிலுள்ள பொற் கிண்ணத்திைத் தவறிக்குேழ்ந்தை கீழே போட்டு'க்கங்கி வைத்து விடுமோ என்ற எண்ணத்தால் குழந்தைத்ள்ர். நட்ை போட்டுச் செல்லும் இடத்துக்கெல்லாம் உடன்செல் லும் தாயைப் போலக் கடவுளும் நம்முடன் உள்ளார் என்ற குறிப்பு மிக்க. நயத்தோடு இவ்விடத்திற் புலப்படுத்தப்பட் டுள்ளது. இவையெல்லாம் கவிமணி தேசிகவிாய்கம் பிள்ளைக்குத் தெரிந்தவைதாமே? அதனல், கவிஞர் தாகூரின் பாடலே மொழிகிப்யர்க்கும் பொழுது எத்துணி எளின்மயோடு நயமாக மொழிபெயர்த்துவிட்டார் என்பது புலப்படும். - 'தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்,' என இறைவன் சுந்தரரை நோக்கிக் கூறியதாகச் சேக்கிழார் கர்ந்துள்ளார். சுந்தரரும்,