32 ச்ெங்கோல் வேந்தர் பதற்கு இன்று கம்மிடையே திரு. டி. கே. சி. அவர்கள் இல்லையே என்பது ஒரு குறைதான். நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளே "கவி தாகூர்’ என்ற தலைப்பில் எட்டுப் பாடல்கள் தந்துள்ளார். அவை அனைத்தும் தாகூரின் புகழைப் பரவுவன. "திங்களின் கதிர்களோடு கதிரவன் ஒளி சேர்ந்தால் ஒப்ப, அந்தணர் அமைதியோடு அரசனின் ஆண்மை சேர்ந்தது சுந்தரக் கவிகள் பாடும் சொல் வளம் உடைய தாகூர் இடத்தில்' என்று ஒரு பாட்டிற் கூறியுள்ளார். தாகூர் பாடல்களே வங்காளியர் எல்லாச் சீமைக்கும் சிறப்புறப் பரப்பினர்கள். தமிழரும் தமிழின் மாண்பை அவ்வாறு பரப்பி வளர்ப் பரோ என்ருர் இராமலிங்கம். r
- சாந்தினிகேதன் என்னும் தாகூரின் கலை சிறு வனத்தை நாமக்கல் கவிஞர்
" கலைகளின் வழியே தெய்வக் கருணையைக் காண்ப தென்னும் நிலையினேப் படிக்க வென்றும் நிறுவிய கிலேயம் ஈதாம் சிலைதரல் ஆடல் பாடல் சித்திரம் நடிப்ப ரங்கம் பலவித வித்தை எல்லாம் பயிலுதற் கிடமாய் கிற்கும்” என்று உளமார ப் பாராட்டியுள்ளார். அதுவே அல் லாமல் “ கவிஞன் கனவு என்ற தலைப்பில் நாமக்கல் கவிஞர் பாடிய ஆறு பாடல்களிற் கவிஞர் தாகூரின் போக்குக் காணப்படுகிறது என்று ஒருவர் கூறுதல்கூடும். 'கண்ணுக்குத் தெரியாத காட்சிகள் காண்பேன் காதுக்குக் கேளாத கீதங்கள் கேட்பேன் எண்ணிக்கை யில்லாத இன்பங்கள் நுகர்வேன் எல்லாரும் இன்புற எங்கெங்கும் பக்ர்வேன்’ என்ற பாட்டு ஓர் எடுத்துக்காட்டு.