தாகூரும் தமிழிலக்கியங்களும் 63 கீதாஞ்சலியிலிருந்து சில பாடல்களைக் கவிஞர் பெரிய சாமி துரனும் மொழிபெயர்த்துள்ளார். 'வாழிய” என்ற தலைப்பிலும், 'மழை கண்ட மயில் ' என்ற தலைப்பிலும், கிலாப் பிஞ்சு என்ற அவரது கவிதைத் தொகுப்பிற் காணப்படும் சில பாடல்கள் தா கூ ர் கவிதைகளே அடி யொற்றி எழுதப்பட்டவை.
- எங்கிருந் தோங் வந்தன; என்முன் கங்குலேப் போக்கி நின்றன; ஆகா; இடியும் புயலும் எனக்கருள் புரியே எடுத்தபே ரறத்தின் கொடியெனக் கண்டேன் வாழிய தருமம் வாழிய கருணை!. - வாழிய உன்றன் மருள்விளே யாட்டே!”
என வந்துள்ள பகுதி தூரனின் கவியாற்றலே நமக்குக் காட்டுகின்றது. மழை கண்ட மயிலில் வரும் " காதலனே இதுகாறும் காணேன், காணுவேன் என்ருடும் உள்ளம்” என்ற அடிகளிலுள்ள கவித்துவத்தைப் படித்துப் படித்துச் சுவைத்து மகிழலாம். அவர் இயற்றியுள்ள ஒடக்காரன் ' என்ற பாட்டி லுள்ள உருவகம் கவிஞர் தாகூரின் உருவகத்தைத் தழு வியது எனக் கூறலாம். - காணவும் கூசினேன் கலக்கியே வெள்ளம் பாறையில் மோதிடப் பகரொணுத் தொல்லைகள் மீறிய தந்தோ வேதனை பொறுக்கிலேன்' எனத் தொடங்குகிறது “ ஒடக்காரன் ' பாட்டு. ' ஈன்றதாய் போலவே என்னையும் காத்து அன்புடன் ஒடம் செலுத்திடும் ஐயனே; உன்னுடை வாழ்க்கை உரைப்பாய் எனக்கே ’