§5? செங்கோல் வேந்தர் சேதியுடன் ஒவ்வொரு குழந்தையும் உலகில் தோன்றுகிறது ” என்றும் அவரே மொழிபெயர்த்துள்ள தாகூரின் கவிகள் துரசன் சிங்தையைவிட்டு அகலவில்லை போலும் ! தாகூரினுடைய கதைகள் சிலவற்றைத் திரு. சீநிவாசாச் சாரியாரும், சுப்பிரமணிய பாரதியாரும் பல்லாண்டுகளுக்கு முன்னரே மொழிபெயர்த்து வெளியிட்டனர். திரு. வ. வே. சு. ஐயர் அவர்களாலும் தாகூர் தமிழ்நாட்டில் அறியப் படலாயினர். தா கூ ரு ைடய சிறு க ைத க ளே யும் புதினங்களையும் மொழி பெயர்த்து வெளியிட்டமைக்காக அறிஞர்கள் த. கா. குமார்சாமி, த. கா. சேனபதி, திரு வாளர்கள் வி. ஆர். எம். செட்டியார், ஏ. கந்தசாமி, டி. எஸ். பார்த்தசாரதி, திருவாட்டியார் அரங்கநாயகி அம்மாள், தஞ்சம்மாள், சாவித்திரி அம்மாள் ஆகியோ ருக்குத் தமிழகம் பெரிதும் கடமையுடையது. எனவே, இவற்றை யெல்லாம் தமிழ்மொழி வழியாகப் படித்தறிந்து மேன்மேலும் கவிஞர் தாகூரை நன்கு அறிந்து கொள்வ தற்குத் தமிழ் மக்கள் வாய்ப்புடையவராக உள்ளனர். ஆதலால், வருங்காலத்தில் ' யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழக விழுமிய கருத்தினை விளக்கமாகப் பரப்பிய தாகூருடைய கருத்துச் செல்வங்கள் காட்டிற்குப் பெரிதும் துணேகின்று பயன்தரும் என்பது உறுதி.
பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/75
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
