அழகின் சிரிப்பு இக்காலத் தமிழ்மக்கள் கருத்திற்குத் தக அவர்த்ம் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உதவும் வகையிற் கவி இயற்றுவோருள் தலைசிறந்து விளங்குபவர்களில் பாரதிதாசன் ஒருவர். சுப்பிரமணிய பாரதியாரை அடி. யொற்றி அவர் பாராட்டும் வண்ணம் கவி எழுதத் தொடங்' கியதால் பாரதிதாசன்’ எனப் பெயர் வைத்துக்கொண்ட கனக சுப்புரத்தினம் அவர்கள் பொழிந்துள்ள பொன்னும் மணியும் பற்பலவாகும். நன்றி மறவாப் பெற்றி வாய்ந்த தமிழ்மக்கள் உள்ள நம் நாட்டில் அவருக்கு நிலைபெறு தலையுடைய புகழுண்டாயிருப்பது கண்கூடு. தமிழ்மணம் வீசும் எந்தவிடத்திலும் அவர் பாட்டு இசைக்கப்படாது இருப்பதில்லை. 'இன்பம் எனப்படுதல்தமிழ் இன்பம் எனத் தமிழ் காட்டினர் எண்ணுக’ என்ருர். 'வெள்ளம்போல் தமிழர் கூட்டம்; வீாங்கொள் கூட்டம் அன்னர் உள்ளத் தால் ஒருவரே மற்று உடலினம் பலராய்க் காண்டார்; கள்ளத்தால் நெருங்கொணுதே என வையங் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எங்காள்? உள்ளம் சொக்கும் நாள் எந்த காளோ?” எனப் பாடித் தமிழரிடை ஒற்றுமையை வற் புறுத்தியுள்ளார். "செந்தமிழைச் செந்தமிழாய்ச் செய் வதுவும் வேண்டும்' , 'பொங்குதமிழர்க் கின்னல் விளைத் தால் சங்காரம் கிசமெனச் சங்கே முழங்கு' , 'தமிழினை இகழ்ந்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்’ போன்ற வீர வுரைகளே அழகாக வழங்கியுள்ள பாரதிதாசருக்கு தமிழகம் என்றும் கடப்பாடுடைத்து. .
பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/76
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
