பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£8 செங்கோல் வேந்தர் அவருக்குத் தமிழ்மொழியில் உள்ள பற்றிற்கும் ஆர்வத் திற்கும் எல்லையில்லை. அவர் பாடல்களைப் படிக்கிற அன் னியனும் தமிழன்பன் ஆகிவிடுவான். "தனிமைச் சுவையுள்ள சொல்லை-எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங் கண்டதில்லை” "தமிழென்று தோள் தட்டிஆடு-நல்ல தமிழ்வெல்க வெல்க என்றே தினம்பாடு” 'தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்" 'தமிழும் கானும் மெய்யாய் உடலுயிர் கண்டீர்’ 'உயிரை, உணர்வை வளர்ப்பது தமிழே" எனவரும் அடிகள் போன்றவற்றைப் பாடக்கேட்கும். தமி ழர் வீரத் தமிழர் ஆகிவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை. தமிழிசை உள்ளம் உருக்குவதைத் குறித்துத் "தமி ழுணவு' என்னும் பாட்டிலே அழகாக அவர் கூறியுள்ளார். “வண்ணத் தமிழ்ப்பதம் பண்ணிற் கலந்து என்றன் கெஞ் சையும், வானத்தையும் குளிர் நீரையும், நிலவையும், தமிழர் குலத்தையும் ஒன்றெனச் செய்த்துவே" என்றும். "தமிழ் வளர்க கலை யாவும் தமிழ்மொழியில் விளைந் தோங்குக" என்றுங்கூறிய இடங்கள்ே நோக்குக. உலகில் ஒற்றுமை வேண்டும் என்பதையும், மக்கள் தம்முடைமையைத் தனியுடமையாய் மதிக்காது பொது வுடைமையாக மதிக்கவேண்டும் என்பதையும், "உலக ஒற்றுமை' , 'முன்னேறு' , 'உலகம் உன்னுடையது” , "புதிய உலகுசெய்வோம்’ முதலிய தலைப்புகளில் அழகாக எடுத்து இயம்பியுள்ளார். பெண்கள் விடுதலைக்கும், பெண்கள் முன்னேற்றத் திற்கும் உரியமுறையில் அவர் பாடலுட் பல அமைக் துள்ளன. அவற்றைப் படிப்போர் காதல் மணங்களைத் தடைப்படுத்தக் கூசுவர். கைம்பெண் மறுமணத்தை மறுக்க