} செங்கோல் வேந்தர் பறித்துக் காதலும் பறித்தாரோ ஆடவர் எனக் கலங்கு கிருர், ஆடை அணிகலன், ஆசைக்கு வாசமலர் தேடு வதும், ஆடவர்க்குச் சேவித்திருப்பதும், அஞ்சுவதும் காணுவதும், ஆமையைப்போற் கெஞ்சுவதும் ஆகக் கிடக்கும் மகளிர் குலம் மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஒரு பகுதி' என இரங்குகிருர். 'மாதர்தம் உரிமை மறப்பது மாண்பா?, மாதர் முன்னேற்றத்தால் மகிழ்வது மாண்பா ஆய்ந்துபசர்?’ என்கிரு.ர். கல்வி இல்லாத ஆடவரும் மகளிரும் வாழ்வதால் வீடு எவ்வாறு இருண்டதாக இருக்கும் என்பதை இருண்ட் வீட்டில் கன்ருக எடுத்துக் காட்டியுள்ளார். பகல் பன் ளிைரண்டு மணிக்குப் பழங்கல அன்றக்குட் பதுங்கியிருந்த கிழ எலிகள் வீட்டின் பல இடங்களிலும் தோன்றி ஆடல்பாடல் அரங்கு செய்த விதத்தை எடுத்துக்காட்டி புள்ளார். வீட்டிற் காற்று வீசுந்தோறும் மோட்டுவளை யில் மொய்த்த ஒட்டடை பூமழையாகப் பொழிகின்ற தரை யில், ஊமைக்குப்பைகள் உம் என்று மேலெழும் என்று கூறிய இடத்தில் இருண்ட வீட்டின் இயல்பினை உண்மை யிற் படமாக்கிவிட்டார். 'அறிவே கல்வியாம்; அறிவிலாக் குடும்பம் கெறிகா னது கின்ற படிவிழும் சொத்தெலாம் விற்றும் கற்ற கல்வியாம் வித்தால் விளைவன மேன்மை, இன்பம் செல்வம் கடல்போல் சேரினும் என்பயன்? கல்வி இல்லான் கண்ணிலான் என்க. ' இதற்கு நேர்மாருக, 'குடும்பவிளக்கில் கல்வி அறிவு உடையவர்கள் எவ்வளவு இனிமையாகவும் அழகுபடவும் இல்லறம் கடத்துகிருர்கள் என்பதை எடுத்துக்காட்டியுள் ளார். பெண்கட்கும் கல்வி வேண்டும் என்பதைப் பல பாடல்களால் வற்புறுத்தியுள்ளார். காட்டாய இரண்டு அடியில் வருவன:
பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/79
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
