பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரிப் பள்ளு 39. வம்புக்கு இழுக்கிருர்கள். இளையாள் சொல்கிருள்: 'பசி பொறுக்க மாட்டாமலே சோற்றுக்குச் செத்தே - உங்கள் பரமனர்கஞ் சுண்ட கதை நானறியேனே?” பதிலுக்கு மூத்தவள் சொல்லுகிருள்: 'புசித்திடவே சோறுகிடை யாமல் தானே- யுங்கள் புங்கவளுர் மண்ணேயுண்டு கக்கவில்லையோ?” பிறகு இரண்டுபேரும் தாமாகவே ஒற்றுமைப்ட்டுக் கடவு ளார் இருவரையும் பேதித்துப் பேசுவது குற்றம் என்ற முடிவுக்கு வருகிருர்கள். மற்றும், தாங்கள் இருவரும் ஒத்து வாழவேண்டுமென்றும் முடிவு செய்துகொள்கிருர்கள். மூத்தாளேப் பார்த்து, "ஒருபானைச் சர்க்கரைபோல் இருவரும் ஒத்து வாழ வேண்டும்’ என்கிருள் பழகிப்பள்ளி. இளேயாகிளப் பார்த்து: "கூடிக் கெட்ட பேர்களும் பிரிந்து வாழ்ந்தோரும் இக்குவலயத்தே காணேனடி’ என்று கூறுகிருள் வையாபுரிப் பள்ளி. இங்ங்னம் முடிகிறது. இந்தப் பள்ளு. - இதை இயற்றியவர் பழகிச் சமீனைச் சேர்ந்த குமார வேலச்சின்னேவையன். இவர் இளவரசராய் இருந்த பொழுது இப்பள்ளினே இயற்றினர் போலும் இவர் தந்தை யைக் குறித்து நூலிற் சிற்சில இடங்களிற் குறிப்பிட்டுள் 1ளார். மழை மிகுதியாபப் பெய்தது என்று சொல்லுகிற இடத்திலே 'சின்னேவையன் கொடையைப் போலச் சொரிந்தது' என்று கூறியுள்ளார். நூலினை முடிக்கிற இடத்திலும் " சின்னேவையன் நீடுழிகாலம் நாடாண்டு சிலாக்கியம் பெற்று வாழ்க’ என்று வாழ்த்தியுள்ளார்.