பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. செங்கோல் வேந்தர் இந்தச் சின்னேவையன் காலம் 18ஆம் நூற்ருண்டு என்பது தெரிகிறது. எனவே, இந்த நூல் இருநூறு ஆண்டுகட்கு முன்னல் எழுதப்பட்டதாகும். இவ் வாசிரியர் வெறுக்கத்தக்க வகையிலே சில வருணனைகளே இடையிடையே அமைத்திருக்கிருர் என்று சொல்லாமல் இருக்கமுடியவில்லை. அவையெல்லாம் அக் காலப்போக்கெனத் தள்ளிவிடத் தக்கன. காட்டாக, புவி யில் இச்சித்தி பெண்களையும், அனுபவியாதார் சன்னம் ஆண் சனனம் ஆகாதே’ என்று கூறியு இவர் அக்காலத்து இழிசின மக்கள். கருத்தை ஒட்டி இப்படிக் கூறினர் போலும்! - பெரும்பான்மையான பெண்கள் கணவனிடம் கோபங் கொண்டு முதலில் அவனே அல்லல் உறச் செய்வாராயினும் அல்லலுறும் நேரத்திலே தாங்கள் அதனைப் பார்க்கப் ப்ொறுக்காமல் அவனுக்கு நன்மை செய்ய முயல்வது உலக இயல்பு. அவ்வியல்பினையுணர்ந்து இவ்வாசிரியர் கணவனைக் குற்றஞ்சாட்டிய மூத்த பள்ளியே அவனை விடுவிக்க முயலும் முயற்சியில் தன்மீதே பழி சுமத்திக்கொள்கிருள் என்று காட்டியுள்ளார். எரு வைக்க இடையர்கள் புறப் பட்டு வந்த காட்சியை வருணிக்கின்ற இடத்திலே இயல் ப்ான முறையில் அவரை அமைத்துப் பேசியுள்ளார். இடை யர்கள்:பட்டை காமம் போட்டவர்கள்; இருப்புக்கட்டுச் சேர்ந்த தடியை வீசி வருபவர்கள்; முட்டுவதுபோல இருக் கும் கரைத்த மீசையை முறுக்கிவிட்டு வருபவர்கள்; துளசியைச் சட்டமாய் அணிந்து வருபவர்கள் என்பத்னை பட்டைநா மங்க ளெங்கும் பழுக்கவே போட்டி ருப்புக் கட்டுசேர் தடியை வீசிக் கையினிற் கடையால் கொண்டு முட்டவே கரைத்த மீசை முறுக்கியே துளவப் பாசி சட்டமா யணிந்தே ஆயர் சகலருங் தோன்றினரே” என்றவாறு பாடினர். இப்படி, பள்ளர் இயல்புக்கும், நாட்டுப்புற மக்கள் இயல்புக்கும் ஏற்ற வகையில் அமைந்த ஒர்ணனைகள் பற்பல இப்பள்ளுவில் உண்டு.