பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 செங்கோல் வேந்தர் ரது கருத்து, அதிகுல், எழுபது அல்லது எண்பது ஆண்டு களில் ஆங்கிலத்தில் வரையப்பட்ட பல்லாயிரக்கணக்கான கதைகளில் மிகச் சிறந்தவை என மதிக்கத்தக்கவை பத் துக்கு மேல் இல்லை என்ருர், பேரி பெயின் என்பாரும், ஹென்றி ஹட்சன் என் ங்கிலச் சிறுகதைகளின் இலக்கணம் எனச் சில ார்கள். அவை நம்மாலும் அறியத்தக்கவை ஆகும். - --- . - .- .ه. بيزيه .............. தமிழுக்குச் சிறுகதை இலக்கிய யாப்பு ஒரு புதுமுறை என நாம் அறிகிருேம் ஆதலாலும், தமிழ்ச் சிறுகதைக், கெனத் தனியான இலக்கணம் இல்லையாதலாலும், ! ஆ ஆதலாலும், சிறுகதை இலக்கணத்தைப்பற்றி ஆங்கில அறிஞர்கள் கருத்து யாது என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் தகும். | முதலாவதாகச் சிறுகதைகள் எல்லாம் கதைகளா யினும், சில இலக்கணங்களுக்குப் பொருந்தாவிட்டால் ஆவை சிறுகதைகள் ஆதல் இல்லை என்று அறிஞர் கருது கின்றனர். எல்லாச் சிறுகதைகளும் கதைகளாயினும், எல்லாக் கதைகளும் சிறுகதைகள் ஆகமாட்டா சிறிய அளவினவாகிய கதைகளே சிறுகதைகள் எனச் சொல்லத் தக்க ஓர் அம்சச்தைப் பெறுகின்றன. அளவு ஒன்றே சிறுகதைக்கு இலக்கணம் அன்ருயினும், அளவும் ஓர் இலக்கணம். இரண்டாயிரம் சொற்கள் முதல் மூவாயிரம் சொற்கள்வரை அமைந்த எல்லையில் சிறுகதைகள் எழுதப் படவேண்டும் என்பது அஞறிர் சிலர் நம்பிக்கை. கால் மணி நேரத்திலோ, அரைமணி நேரத்திலோ ஒரு மூச்சிற் படித்து முடித்துவிடக் கூடியதாகச் சிறுகதை இருத்தல் வேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. * . . . . . ... -- எனினும், இரண்டாயிரம் சொற்களில் அல்லது மூவா யிரம் சொற்களில் அமைந்துவிடுவதால் ஒரு கதை "சிறு