பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுகதை 3% கதை’ ஆகிவிடாது; அரைமணி கேரத்திற்குள்ளாகப் படித்து முடித்துவிடக்கூடிய கிலேயில் இருப்பதால் மாக் திரம் ஒரு கதை "சிறுகதை' ஆகிவிடாது ஐந்து அல்லது ஆறு பக்கத்தில் ஒரு கதை அமைந்துவிட்டால் மாத்திரம் "சிறுகதை' ஆகிவிடாது. கதையில் வருகின்ற பாத்திரங் கள் சில சூழ்நிலைகளில் எவ்வாறு கடந்துகொள்கிருர்கள், எவ்வாறு பேசுகிருர்கள், எத்தகைய குண இயல்புகள் உடையவர்களாகக் காட்சி அளிக்கிருர்கள் என்பது சிறப் பாகக் கவனிக்கப்படும். அப்பாத்திரங்கள் உயிருள்ள பாத் திரங்கள் போலவே அடிப்படையில் காட்சியளித்தல் வேண்டும். எலும்பொடும், தோலொடும், தசையொடும், உயிரொடும் கூடி வாழ்கின்ற மக்களைப் பற்றிக் கதை பேசுகிறது என்ற உணர்ச்சி உண்டாகும்படிக் கவர்ச்சி யோடும் விறுவிறுப்போடும் எழுதப்படும் சிறுகதிை: சிறந்ததாக மதிக்கப்படும். - ஒரு பாத்திரத்தின் முழு இயல்புகளே எல்லாம் ஒரு சிறுகதையில் அமைத்துக் காட்டிவிட வேண்டும் என் பது கருத்தாகமாட்டாது; ஒரு பாத்திரத்தின் முழு வாழ்க் கையைப் படம் பிடித்துக் காட்டவேண்டும் என்பது சிறு கதையின் கோக்கமாக மாட்டாது. ஒருவருடைய வாழ்க் கையில் ஒரு கூற்றினேப்பற்றியோ ஒருவருடைய பல இயல்புகளில் ஏதேனும் ஒன்றைப்பற்றியோ எடுத்துச் சிறப்பாகக் காட்டுவதுதான் சிறுகதையின் கோக்கமாய் இருத்தல் வேண்டும். • ‘ ஒவியம் வரைகின்ற ஒருவன் எட்டுநாள், பத்துகாள். நூறுநாள் ஒர் ஒவியத்தை அழகுற வண்ணங்களால் திட்டுதல் கூடும். அதனைப் போன்றது நாவல் அல்லது புதினம். சிறுசிறு கீறல்கள் சிலவற்ருல் ஒருவருடைய முகத்தின் சிறப்பு அம்சங்களை விளக்கிக் காட்டும் நோக் கத்தோடு கையேட்டு ஓவியம் வரைகின்ற ஒருவனுடைய கிலேயிற் சிறுகதை ஆசிரியன் உள்ளான். பொருள் கிறைந்த, திட்பநுட்பம் வாய்ந்த சொற்களே ஆளுவதால் ஒருவர் ஒரு பாத்திரத்தின் முழுத் தோற்றத்தை நம் கண் எதிரே