பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுகதை படுதலைப்போல, ஒரே சிறுகதை ஒருவர்க்கு பதாகவும், பிறர்க்கு மகிழ்ச்சி கல்காததா 交 கூடும். பொது இலக்கணங்கள் சிலவற்றைக் kN به عه ஒரு சிறுகதை இயற்றப்பட்டிருந்தாலும் ஆகனப் படித்துப் பார்ப்போருடைய திறமைக்கும் இயலபுக்கும் சுவை மைக்கும் ஏற்ப அது வேறுபடும். உலகத்தில் உள்ள தலே சிறந்த சிறுகதைகளுக்கு நிகர்ப்ப வைத்து எண்ணத்தக்க நிலையில், ஆண்டுதோறும் பத்து அல்லது பதினேந்து சிறு கதைகள் தமிழில் வெளியாகலாம். அன்றி, பத்து அல்லது பன்னிரண்டு தமிழ் எழுத்தாளர்களுடைய சிறுகதைகள் தலைசிறந்த இடம்பெறுதல் கூடும். பத்து, பன்னிரண்டு என்ற எண்ணிக்கை ஐம்பது அல்லது நுாறு என்ற கருத் தைத் தரும் ஒரு குறியீடே தவிர, பத்து அல்லது பன்னி ரண்டு என்ற எண்ணிக்கையையே கூறுவதன்று. உறுதி யாகப் பத்து பன்னிரண்டு கதைகள் தேறும் என்று ஒருவர் சொன்னல், வேறு ஒருவர் நூறு அல்லது நூற்றைம்பது தேறும் என்று சொல்லுதல்கூடும். தலைசிறந்த 'சிறுகதை, கள்” இன்ன என முடிவுசெய்தற்குரிய அளவுகோல்கள், தராசுத்தட்டுகள், உரைகற்கள் இன்னும் 5ம் மொழியில் அமையவில்லை. உள்ள அளவுகோல் ஒருவருடைய திறத் 'திற்கேற்ப மாறுகின்றது. அதனுல்தான். சில வேளைகளில் ஒரு பத்திரிக்கையில் தள்ளப்படுகின்ற சிறுகதை இன் னொரு பத்திரிகையில் விரும்பி ஏற்கப்படுகின்றது. அத ல்ைதான், போட்டி நடுவர்களாக நியமிக்கப்படுபவர்களி டைய்ே கருத்து வேறுபாடுகள் நிகழ்கின்றன. அவை, காரணமாக, பரிசு பெறவேண்டிய நல்ல 'சிறுகதை சில வேளைகளிற் பரிசின் எல்லையை எட்டிப் பாராமலேயே கின்றுவிடுகிறது. . - - பத்திரிகைகள் நம் காட்டிற் கதைகளின்கண் மக்களது. ஆர்வத்தை கிரம்ப எழுப்பி வளர்த்திருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. பத்திரிகைகள் வாயிலாகச் சென்ற இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழில் வெளியாகி 'உள்ள சிறுகதைகளின் எண்ணிக்கை ஐம்பதினுயிரம் இருக்