பக்கம்:செங்கோல் வேந்தர்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிக்கலை மொழிகள் தாமாக வளர்கின்றன, வளரும் இயல் புடையன. வாழ்வன, இறப்பன, பிறப்பன என்பது போன்ற, கம்பிக்கை உடையவர்களாய் இரண்டு நூற். முண்டுகளுக்குமுன் மொழி நூற் கொள்கையுடையார் சிலர் இருந்தனர். ஆனால், அக்கருத்து தவறுபட்ட கருத்து என் பதே இக்காலத்திய கம்பிக்கை. மொழிகள் பிறத்தலும் வளர்தலும் இறத்தலும் உருவகங்களே ஒழிய உண்மை யல்ல. மொழிகள் நாம் தோன்றுகின்றவாறு தோன்று வனவல்ல; காம் இறந்துபடுமாறும் இறப்பனவல்ல, மொழிகளில் ஒன்றினைத் தாய் எனக் கூறுவதும் உரு. வகமே. ஒரு திசையில் ஒரே விதமாகப் பேசிக்கொண் டிருந்தவர்கள் பல்வேறு திசைகளுக்குப் போய்ச் சிலச்சில திரிபுகளோடு பேசத் தலைப்பட்டார்களாக, மூலமொழி போன்றுள்ளதை மற்றவற்றின் "தாய்' என உரு வகித்துக் கூறுவது மரபாயிற்று. அன்றியும் ஒருவர்க்கு. ஒரு மொழி "தாய்மொழி' என்னும்போது, அம்மொழி அவருடைய தாயிற்ை சிறுவயது முதல் பயிற்றுவிக்கப் பட்ட மொழி என்பதே பொருள். ஒருவர் தம்மளவில் பேசிக்கொள்ளுதல் பேச்சு என் அறும், ஒருவர் பலரோடு தொடர்பு வைத்துக்கொள்ளப் பயன்படுவது மொழி என்றும் சொல்லப்படும். பேச்சு என்பது ஒவ்வொருவர்க்கும் சிறப்பாக அமைந்திருக்கும் ஒவ்வொரு சொற்ருெகுதி; இது தனிப்பட்ட ஆளேப் பொறுத்தது. மொழியோ பலர்மாட்டும் அடங்கிக்கிடக்கும்