பக்கம்:செந்தமிழ் ஆற்றுப் படை.pdf/5

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

'செந்தமிழ் ஆற்றுப் படை சிறப்புப் பாயிரம்.

பேராசிரியர், நீதிவாதி, நாவலர், இளசை கிழார், உயர்தி

சோமசுந்தர பாரதியார், M. A., B. L.

அவர்கள் அருளியது.

"சுதை இயற்கவி சுந்தர சண்முகர் புதுவைப் பாவலர் புதிது புனைந்துள அதுலச் 'செந்தமிழ் ஆற்றுப் படை' வெகு மதுரமார் தமிழ் வாய்மைக் கவிதையாம்; சதுரம் வாய்ந்தது தமிழொடும் வாழ்கவே ”

குறிப்பு.-- சுதை= அ மி ழ் து.அதுலம் - இணையின்மை மதுரகவி-ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனக் கவி நான்கு வகையுள் ஒன்று.

நாவலர் ச. சோமசுந்தரபாரதி

"செந்தமிழ் ஆற்றுப்படை-சிறப்புரை. பேராசிரியர், கவியரசு, உயர்திரு. அரங்க. வேங்கடாசலம்பிள்ளையவர்கள்

அ ரு ளி ய து
  • எந்தம துள்ளத் தென்றும் ஒளிரும் சுந்தர சண்முகத் தூமணி வழங்கிய அஞ்சுடர்ச் செந்தமிழ் ஆற்றுப் படையினைக்

கண்டேன் உள்ளம் களித்தெழ மகிழ்ந்தேன் ! இஃதிப் பிறவியில் எய்துமோர் நல்வினை ! எத்துணை ஆழ்ந்தது எத்துணை அகன்றது ! எத்துணை உயர்ந்தது! என்பன உணர்ந்தேன் ! தமிழனை ஆற்றுப் படுப்பது தமிழனை (அன்னை ) தன்பால் ஆற்றுப் படுப்பதாம் தகவல் இருமை நெறியாம் இறும்பூ துணர்ந்தேன் ! பாலுண் சிறுவன், பசித்தழும் குழந்தையை அன்னைபால் ஆற்றுப் படுத்தலவ் வன்னையை அதன்பால் ஆற்றுப் படுத்தலும் ஆதலின் மும்மை நெறியாம் உண்மையும் கண்டேன் ! இந்நூன் மா ண் பெ லா ம் எடுத்து விரிப்பின் சிறப்புரை என்னும் உறுப்பினில் அமையா(து)