பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை வட சொற்களின் கலப்பும் புகுந்து நிலைபெறத் தொடங்கியது. இக் காலக் கட்டத்தில் சமயச் செய்திகளை மக்கள் அறிந்து கொள்ளவும். வடசொற்களின் பொருளைத் தெரிந்து கொள்ளவும் ஒப்புநோக்கு நூல்கள் தேவைப்பட்டன. இத் தேவையை நிறைவேற்றும் நோக்கில் நிகண்டுகளின் வளர்ச்சி தொடங்கியது. ஒரு மொழியின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் சிறப்புச் சேர்க்கும் முதன்மையான பணி அகரமுதலி உருவாக்கம் எனில் அது மிகையன்று. நனிமிகு தொன்மை வாய்ந்ததும், இலக்கணச் செம்மையுடையதும், பல்துறை இலக்கிய வளம் மிக்கதும், பரந்துபட்ட மக்கள் வழக்குக் கொண்டதும் பன்னாட்டு மொழியாக விளங்குவதுமான தமிழில் சொல்லின் பொருளைத் தெளிவாக அறிய வழிகாட்டுதல் ஓர் அரிய செயலாகும். தமிழ்ச் சொல்லமைப்பை எளிதாக அறிந்து சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றலை மக்கள் பெறவேண்டுமெனில், தமிழ்ச் சொற்களின் பொருளை நுட்பமாக அறிந்து கொள்ளுமாறு செய்ய வல்லவை அகரமுதலிகளே எனலாம். அவரால் அகரமுதலி, சொற்களை அகரம் முதலாக வரிசைப்படுத்தி, அச்சொற்களுக்குரிய பொருளைச் கருக்கமாக விளக்கும் நூலாகும். 'அகரவரிசை', அகரமுதலி என்பன போன்ற சொற்கள் அகராதியைக் குறிக்கும். பழங்காலத்தில் 'நிகண்டு', 'உரிச்சொல்', 'உரிச்சொற் பனுவல்', 'அரும்பதவுரை', அருஞ்சொற் பொருள் விளக்கம் போன்றவை சொற்பொருள் கூறுபவையாக இருந்துள்ளன. காலப்போக்கில் நிகண்டு என்ற சொல்லாட்சியே நிலைபெற்றது. உலகில் அகராதிக் கலை மெதுவாக வளர்ந்ததுபோலத் தமிழ் அகராதிக் கலையும் மெல்ல வளரத் தொடங்கியது. தமிழ்மொழியின் தொல்பழங்கால இலக்கண நூலாம் தொல்காப்பியத்தில் "அகரமுதல் னகர இறுவாய்” என்ற தொடரால் அகரவரிசையின் தொடக்கமும் முடிவும் அமையும் நிரல் வரிசை நெறிமுறைக் கோட்பாடு அகராதிகளின் களமாக உருவாக்கம் பெற்றது. தொல்காப்பியத்திற்கு உரைகண்ட இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் போன்ற உரையாசிரியர்களின் அருஞ்சொற்களுக்குப் பொருள் விளக்கம் அளிக்கும் முன்முயற்சியும் பிற்காலத்தில் தோன்றிய நிகண்டுகளுக்கும், தமிழ் அகரமுதலி வளர்ச்சிக்கும் உரமாயிற்று. ஒன்பதாம் நூற்றாண்டில் எழுந்த திவாகரம் ஏறத்தாழ 9500 சொற்களைக் கொண்டு பன்னிரு பகுதிகளாக திவாகரர் என்பவரால் தொகுக்கப் பெற்றது. திவாகரத்தை அடுத்து, பத்தாம் நூற்றாண்டில் 14.700 சொற்களுடன் பிங்கல நிகண்டு பத்துத் தொகுதிகளாகப் பிங்கலர் என்பவரால் தொகுக்கப் பெற்றுள்ளது. தமிழ் இலக்கண நூலாம் நன்னூல் (நூ.460) இதன் சிறப்பைச் கட்டிக்காட்டுகிறது. பிங்கலத்திற்குப் பின் 16 ஆம் நூற்றாண்டில் மண்டல புருடர் என்பவரால் 11.000 சொற்களுடன் பன்னிரு தொகுதிகளாக வெளிவந்த சூடாமணி நிகண்டு மக்களிடம் மிகுந்த சாய்கால் பெற்று விளங்கியது. அகரம் முதலாகச் சொல்நிரல் அமைவதை முதன்முதலாக நிகண்டுகளில் கையாண்டவர் பலியூர்ச் சிதம்பர இரேவண சித்தர் ஆவர். தொகுத்தளிக்கப்பட்ட 'அகராதி நிகண்டு' சிறப்புக் குரியது. அகரவரிசையில் எழுந்த முதல் ஒப்புநோக்கு நிகண்டு நூல் இதுவே ஆகும். தமிழ் அகராதி வரலாற்றில் இந்த நிகண்டிற்குத் தனிச் சிறப்பு உண்டெனில் அது மிகையன்று. அகரநிரல் அமைப்பைச் சுட்ட இவர் பயன்படுத்திய அகராதி என்ற பெயர், இன்று அகராதிக்குரிய பொதுப்பெயராகவே அமைந்து விட்டது. கி.பி.13, 14 ஆம் நூற்றாண்டுகளில் பல்வேறு சிறிய நிகண்டுகள் தோன்றினாலும், 'இலக்கணத் திறவுகோல்' என்னும் தொகைப்பெயர் தொகுப்பு நூல் அகரவரிசை என்னும் அகராதிக் கூறுகளுடன் அகராதிகளுக்கு அகரநிரல் வரிசைக் கோட்பாட்டினை ஆற்றுப்படுத்தும் தோற்றுவாயாக அமைந்தது என்றாலும் நிகண்டுகளெல்லாம். சொற்பொருளை நூற்பா அமைப்பில் கூறிச் செல்வதால், நல்ல கல்வியறிவுடையவரே பயன்கொள்ளும் வகையில் அமைந்துள்ளமையாலும், நிகண்டுகளின் தோற்றம் தொல்காப்பியத்திற்குப்பின் பல நூற்றாண்டுகள் கழித்துச் சமய இலக்கியங்களின் வளர்ச்சியோடு, தமிழில்