பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகரமுதலிக் கோட்பாடு 23 சொல் வடிவ காண 6. ஒரு சொல்லின் ஒரு பகுதியைக் கொள்ளாமல் அதன் முழுமையான வடிவத்தைக் கொண்டே அச்சொல்லின் சொற்பிறப்பைக் காண வேண்டும். மாற்றங்களைக் ஒலியியல் நெறிகள் மீறப்பட்டிருக்குமோ என்பதைக் கூர்ந்து பார்க்க வேண்டும், 7. வெவ்வேறு ஒலியியல் நெறிகள் கொண்ட தொடர்பில்லாத மொழிச் சொற்களுக்கிடையே காணப்படும் மேற்போக்கான பொருள், வடிவம் ஆகியவற்றின் ஒற்றுமையைக் கொண்டு ஆராயலாகாது. 8. இருவேறு மொழிகளின் சொற்கள் ஒலியியல் நெறிக்கு அப்பாற்பட்டு ஒத்திருக்குமேயானால் அங்கு ஒன்று மற்றொன்றிலிருந்து கடன் வாங்கியிருக்க வேண்டும். உண்மையான இனச்சொற்கள் அனைத்திலும் ஒத்திருக்க வேண்டியது இல்லை. 9. ஒரு மொழிச்சொல் (ஆங்கிலச்சொல்) லின் இனச்சொல் அனைத்தையும் கொண்டு ஆராயாமல் அச்சொல்லுக்கு மட்டும் விளக்கம் அளிப்பது பயனற்ற முயற்சியாகும். சொல்லின் பழைய வடிவம். அச்சொல் வழங்கும் மொழியின் ஒலியியல் நெறி, குறுகிய அசை, முதன்மையான உயிரொலி, சொல்வடிவம் முழுமையையும் ஆய்வுக்குக் கொள்ளல், மேற்போக்காகக் காணும் ஒலி ஒப்புமையைக் கொள்ளாமை, இனச் சொற்களையும் ஆராய்தல் ஆகியவை ஒரு சொல்லின் சொற்பிறப்பை ஆராய்வதற்குத் தேவையானவை. தமிழ்ச் சொற்களுக்கான வேர் விளக்கத்தை அறிவியல் அடிப்படையில் காட்டுவதற்குப் பெருமுயற்சி எடுக்க வேண்டும். அவ்வகையில் இதன் வெற்றி எந்த அளவிற்குச் சென்றுள்ளது என்பதை இனிவரும் அகரமுதலி வல்லுநர்கள் தான் அறிய வேண்டும். எவ்வாறாயினும் இது வருங்கால அகரமுதலி வல்லுநர்களுக்கு, குறிப்பாகச் சொற்பிறப்பியல் அகரமுதலி வல்லுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும். இதில் காட்டப்பட்டுள்ள வேர்களுள் சில பொருத்தப்பாடு இல்லாதன என்று சிலர் கருதலாம். பொருத்தப்பாடு இல்லாத வேர்கள் கருதுவனவற்றிற்குச் சரியான வேர்கள் காண்பது நம் கடமைகளுள் தலையாயது. தமிழில் இதுவரை வந்த அகரமுதலிகள் அனைத்தும் இந்தச் சொற்பிறப்பு அகரமுதலியின் வெற்றியில் பங்கு பெற்றுள்ளன. எவ்வளவு சிறிய அளவினவாக இருந்தாலும், சுருக்கமான செய்திகளைக் கொண்டிருந்தாலும் ஏதோ ஒருவகையில் அந்த அகரமுதலிகள் எல்லாம் சொற்பிறப்பியல் அகர முதலிக்குத் துணை நின்றுள்ளன. சொற்றொகுப்புக்கு, பொருள் வரையறைக்கு இவற்றின் பங்கு குறிப்பிடத் தக்கது. வேர் காட்டும் அகரமுதலிகள் வேறு வகையில் வேர்காட்டியிருந்தாலும் அந்த வேர்கள் நமக்கு ஏதோ ஒரு வகையில் குறிப்புத் தர இருப்பதால் அவற்றின் பங்கும் ஏற்கத்தக்கதே. திராவிடச் சொற்கள் அனைத்தும் ஓரசை வேர்களிலிருந்து வளர்ந்து வந்துள்ளன. அந்த வேர்களுடன் பின்னொட்டுகள் இணைந்து சொற்கள் உருவாகின்றன. ஆகையால் அதிக அளவில் பின்னொட்டுகள் இணைந்து சொற்பெருக்கத்திற்குத் துணை நிற்கின்றன. இந்த நெறிக்கு மாறாக இருப்பனவற்றைக் கூர்ந்து பார்க்க வேண்டும். இந்த நெறிகள் பின்பற்றப்படும் பொழுது இயல்பான சொல்வளர்ச்சியைக் காட்டுகின்றன (இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட கூட்டுச் சொற்கள் இணைந்து சுருங்கிவிடுகின்றன. அவ்வாறான இடங்களில் அந்தச் சொற்கருக்கம் ஒரு சொல் போலவே காட்சியளிக்கும். எ- டு : அருகாமை. அருகு + அண்மை - அருகண்மை அருகாமை] ஒரு சொல்லுக்கு வேர் காண்பதற்கு முன் அச்சொல்லின் பழமையான வடிவத்தையும் அதன் பயன்பாட்டையும் காலந்தோறும் மாறிவந்துள்ள நிலையையும் காணவேண்டும். அச்சொல் மொழிக்குரிய சொந்தச் சொல்லாக இருந்தால் இன மொழிகளில் அச்சொல்லின் வரலாற்றைக் காண வேண்டும். கடன்பெற்ற சொல்லாக இருந்தால் நிலவியல் தன்மை, வரலாற்று நிகழ்வு ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். கடன்பேறு இருமொழித் தொடர்பினால் ஏற்படுகிறது என்பதை மனத்திற்கொள்ள வேண்டும் (Skeat 1892 9). செந்தமிழ்ச் சொற்பிறப்பியலின் அணுகுமுறை இந்த வரையறைக்கு ஒவ்வொரு படி நிலையிலும் பொருந்தி வருகிறது. சுட்டடியிலிருந்து சொற்கள் வளரும் நிலையைக் காணும் பாவாணர் வழியில் சொல்லின் பழைமையான வடிவம் ஆய்வுக்கு உள்ளடங்காமல் விடுபடுவதற்கு வாய்ப்பு இல்லை. கழகக் கால இலக்கியங்களிலிருந்து இக்கால வழக்குகள் வரை சொல்லின் படிநிலைகளைக் காட்ட முயல்வதால் சொல் காலந்தோறும் மாறி வந்துள்ள நிலை இங்குக் குறிக்கப்பெறும். தமிழியக் குடும்ப மொழிகளினின்று இனச்சொல் உரிய இடங்களில் காட்டப்படுவதால் எனக்