பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 12, PART 1, சொற்பிறப்பு நெறிமுறைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

K ரா, சிவகுமார், இ.ஆ.ப. அரசு செயலாளர் அன்பார் சு So/ தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை ஓ அலுவலகம் : 044-25672887 இல்ல ம் : 044-28195354 தொலை நீகரி : 044-25672021 நாள் 28.02.2011 “தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று பாட்டுக்கொரு புலவரான பாரதியார் பாடியதற்கேற்ப நம் தமிழ்மொழி என்றென்றும் இளமை குன்றாது வாழ்ந்திருக்கும் வகையில் தமிழ் மொழிக்கே சிறப்பான சொற்பிறப்பியல் நெறியில் மொழியாய்வு அறிஞர் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரைத் தலைவராகக் கொண்டு மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் 08- 05-1974 உருவாக்கிய சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் பல்லாண்டுகளாக உழைத்து 31 தொகுதிகளில் எல்லாச் சொற்களுக்கும் விளக்கம் வரலாறு முதலியன கூறிச் சிறப்பாக வெளியிட்டுள்ளது. அவ்வகையில் தற்போது 'சொற்பிறப்பு நெறிமுறைகள்'என்ற தலைப்பில் வெளிவரும் இறுதித் தொகுதி நம் செம்மொழித் தமிழின் பெருஞ்சிறப்பை உலகத்திற்கு எடுத்துக் காட்டும் வண்ணம் தனித்தொகுதியாக சிறப்பாக வெளிவருகின்றது. இவ்வகரமுதலிப் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் நல்ல வழிகாட்டுதல்கள் நல்கும் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களுக்கும் தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் (ம) செய்தித் துறையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகரமுதலித் துறையில் ஒப்பற்ற பணியேற்றுச் சிறப்பிக்கும் மதிப்புறு இயக்குநர் திரு இரா.மதிவாணன் அவர்களையும் மிகவும் பாராட்டி மகிழ்கிறேன். அரசின் தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் நல்ல முறையில் நிறைவு பெறுவது மிகவும் இன்றியமையாதது. குறித்த காலத்தில் அரசின் திட்டப் பணிகளைச் செவ்வனே நிறைவுறுத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் அகரமுதலித் திட்டப் பணி நிறைவுறப் பெரிதும் உழைத்த திட்டப் பணியாளர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். “தமிழுக்குத் தொண்டு செய்வாய் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே" - பாவேந்தர் (ரா. சிவகுமார் 9 அரசுச் செயலாளர் தமிழ் வளர்ச்சி, அறநிலையம் மற்றும் செய்தித்துறைத் தலைமைச் செயலகம். சென்னை - 600 00 நாமக்கல் கவிஞர் மாளிகை (6ஆவது தளம்), தலைமைச் செயலகம், சென்னை - 600 009. - இணையதளம் : www.tn.gov.in * மின்னஞ்சல் : tamilreinfosec@tn.gov.in