பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 12, PART 1, சொற்பிறப்பு நெறிமுறைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிப்புரை செம்மொழித் தமிழின் சீரார்ந்த முன்மைக்கும் தொன்மைக்கும் அடிப்படைக் கருவி நூலாக இருப்பது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. உலகில் இதுவரை வெளிவந்துள்ள சொற்பிறப்பியல் அகரமுதலிகள் அனைத்தினும் மேம்பட்டதாகத் தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி விளங்க வேண்டும் எனப் பேராசான் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் கனவு கண்டார். அதனை அரசின் திட்டமாக்கிப் பாவாணருக்கென்றே தனித்த ஓர் இயக்ககத்தை உருவாக்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முத்தமிழ்க் கலைஞர் அவர்கள் பாவாணரின் நெட்ட நெடுங்கனவை நீடு நிலைத்த நனவாக்கியதை அகரமுதலி தொகுப்புப் பணி நிறைவுற்று வெளிவந்துள்ள 30 தொகுதிகளில் இன்று காண்கிறோம். இறுதித் தொகுதியான சொற்பிறப்பு நெறிமுறைகள் 31 ஆம் தொகுதியாக வெளிவந்துள்ளது. உலக மொழிகளில் ஆங்கிலம், பிரஞ்சு, செருமானியம், உருசியம், சீனம், இலத்தீனம், சமற்கிருதம் ஆகியவற்றில் சொற்பிறப்பு அகரமுதலிகள் வெளிவந்துள்ளன. இந்திய மொழிகளில் தெலுங்கு, நேப்பாளம் மொழிகளில் வெளிவந்தவை சிறப்பாக அமையவில்லை. குடும்ப மொழிகளுக்காக வெளிவந்த பரோஎமனோவரின் Dravidian Etymological Dictionary (DED), அல்தாய்க்கு மொழிகளுக்காக வெளிவந்த Etymological Dictionary of Altaic Languages (EDAL), பின்லாந்து பேராசிரியர் அன்னு பனு அகோலா வெளியிட்ட SUDURALJAN (சுமேரியன் திரவிடம் ஊரல் மொழிகள் சப்பானியம் ஆண்டியன் இன்கா மொழி) அகரமுதலி ஆகியவை ஒப்பீட்டு அகரமுதலிகளாக (Comparative Dictionary) உள்ளன. இவற்றில் சொற்பிறப்பின் மூலத்தைத் தேடும் முயற்சி முழுமையாக எடுக்கப்படவில்லை. 12000 பக்கங்களில் இரண்டு இலக்கம் சொற்களை உள்ளடக்கி அனைத்துச் சொல்லாட்சிகளுக்கும் வேர்மூலமும் இனச்சொல்வகைப்பாடும் காட்டும் முயற்சியில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி வீறார்ந்த வெற்றி நடை பயின்றுள்ளது. பல்வேறு காரணங்களால் அகரமுதலிப் பணி தொடர்ந்த இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகியது. திட்டமிட்ட கால வரம்புக்குள் நிறைவுறுத்த இயலாமல் வேறுவழியின்றி காலநீட்டிப்பை எதிர்கொள்ள நேர்ந்தது வருந்தத்தக்கதாயிற்று. நெடுங்காலமாகப் புலமை நலம் பொதுளிய திறப்பாடு மிகுந்த இயக்குநர் பணியிடம் நிரப்பப்படவில்லை. அரசு செயலாளரே கூடுதல் பொறுப்பு இயக்குநராக நீடிக்க நேர்ந்ததாலும் புலமை சான்ற இயக்குநரின் ஒரு சீரான மேற்பார்ப்பு இல்லாத நிலையிலும் அகரமுதலிச் சொற்பதிவுகளிலும் சீரான பதிப்புப்