பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேவாங்கம் தேவாதிதேவன் தேவாங்கம் tevarigam, பெ. (n.) பட்டுச்சேலை (வின்.); silk-cloth. தே வாங்கு' tevarigu, பெ. (n.) வேலைப் பாடமைந்த துகில் வகை (பிங்.) (சிலப். 14, 105), 2.60/T): embroidered cloth of superior quality. தேவாங்கு' tevarigu, பெ. (n.) உடலிளைத்துத் தோன்றும் ஒருவகை விலங்கு; lemur, the Indian sloth, loris gracilis, considered to be very thinly built. தின்கிறதைத் தின்றும் தேவாங்கு போலிருக்கிறான் (பழ ம. தேவாங்கு; தெ. தேவாங்கு (தேய் – தேய்வு + அங்கம் = தேய்வங்கம் – தேவங்கம் - தேவாங்கம் – தேவாங்கு தேவாசனம்' tevasagam, பெ. (n.) ஓகிருக்கை வகை (யாழ்.அக }; a kind of yogic posture, தேவாசனம்? tevasanam, பெ. (n.) கோள் ஒன்பான் நிலைகள்; nine statues of the satelites. | தேவாசிரியன்1 tevasiriyan, பெ. (n.) திருக்கோயில்களில் மன்னர், அமைச்சர் முதலியோர் தனியாக வழிபாடு செய்வதற் கென அமைந்த மண்டபம்; a square or rectangular hall with a flat roof supported by pillars, which is made for the king and his ministers to worship separately. தேவாசிரியன்' évasiriyan, பெ. (n.) திருவாரூரிலுள்ள ஆயிரக்கால் மண்டபம்; the hall of thousand pillars in Tiruvārür. "e_sirat தேவாசிரிய னென்னுந் திருக்காவணம்" (பெரியபு. திருக்கூட் 2). தேவாசிரியன்கால் tevasiriyan-kal, பெ. (n.) தேவாசிரியன் என்ற பெயரால் விளங்கிய மரக்கால்; a measurement in the name of Devāsiriyan. [தேவாசிரியன் + கால் இம்மரக்கால் திருமுதுகுன்றமுடைய நாயனார் கோயிலிலும் இருந்ததனைக் கல்வெட்டொன்று உணர்த்துகின்றது. "உடையார் திருமுது குன்றமுடைய நாயநாற்கு - வைத்த திருநுந்தா விளக்கு ஒன்றுக்கு தேவாசிரியன் காலால் அளக்கும் நெய்” (தெ.க.தொ. 144}. தேவாசிரியன்திருக்காவணம் tevasiriyar tiruk-kavanam, பெ. (n.) திருவாரூர் கோயிலில் உள்ள கருங்கல் திருப்பணியாக அமைந்த பெருமண்டபத்தின் சிறப்புப் பெயர்; name of the granite hall in the Tiruvarur temple. "தேவாசிரியன் எனுந் திருக்காவணம்" (பெரியபு. திருக்கூட் 2) (தேவாசிரியன் + திரு + காவணம். காவணம் = கல்மண்டபம் தேவாசிரியன்நாழி tevasiriyan-nali, பெ. (n.) திருமுதுகுன்றம், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய கோயில்களில் நெய் அளக்கப் பயன்படுத்தப்பட்ட நாழிக்கமைந்த பெயர்; name for the measure of capacity to measure the ghee in Tirumudukunram, and Tiruvennai nallir temple. (தேவாசிரியன் + நாழி) தேவாசீவன் teva-sivan, பெ. (n.) கோயிற் பூசகன் (யாழ் அக.); temple priest. தேவாசுரம் tevasuram, பெ. (n.) தேவர்க்கும் அசுரர்க்கும் நடந்த போர்; War between Devar and Asurar. "நீ யன்றே ... தேவாசுரம் பொருதாய்' (திவ். இயற். 368). | [தேவ(ம்) + அசுரம்] தேவாண்டு tevandu, பெ. (n.) தேவராண்டு பார்க்க; see tevar-andu(செஅக.). [தேவ + ஆண்டு தேவாத்திரம் tevattiram, பெ. (n.) தேவர்களால் கொடுக்கப்பட்ட அம்பு; arrow given by the deitics (இருநூ). [தேவ + அத்திரம் Skt. அஸ்திரம் – த. அத்திரம் தேவாத்துமா tevattuma, பெ. (n.) அரசமரம்; pipal trec (சா.அக.). தேவாதி tevadi, பெ. (n.) தேவாதிதேவன் பார்க்க; see tevali-levan தேவாதிதேவன் tévadi-tévan, பெ. (n.) முதற்கடவுள்; the God of Gods. “எனைப் பலருந் தேவாதிதேவனெனப்படுவான்" (திவ். இயற் 2,28