பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேற்றாங்கொட்டை இளகியம் 102 தேறம் தேற்றாங்கொட்டை இளகியம் tegai-kollaiilagiyam, பெ. (n.) தேற்றான் கொட்டையில் செய்த மருந்து; a medicine prepared with clearing nut [தேற்றான் கொட்டை + இளகியம்) தேற்றாம்பொடி terrainpodi, பெ. (n.) தேற்றாங் கொட்டையிற் செய்த மருந்துப் பொடி,, medicinal powders of terrai-kollai. [தேற்றாம் + பொடி] தேற்றார் texgar, பெ. (n.) 1. அறிவிலி; the ignorant. 2, பகைவர்; foes, enemics. (தேற்று + ஆ + அர். 'ஆ' எதிர்மறை இடைநிலை) தேற்றாவொழுக்கம் terra-v-o/ukkam, பெ. (n.) ஐயுறத்தக்க தீயொழுக்கம்; doubtful, shady conduct. “தேற்றா வொழுக்க மொருவன்க னுண்டாயின்" (நாலடி, 75) (தேற்று + ஆ + ஒழுக்கம் தேற்றான்மரம் terap-maram, பெ. (n.) தேற்றா (தைலவ.தைல.) பார்க்க; see texa. ம. தேற்றாமரம் (தேற்றா + மரம் தேற்றான் விதை terran-vidai, பெ. (n.) தேத்தான்கொட்டை பார்க்க ; see tittay-kottai (சா.அக.), ம. தேற்றான்கொட்ட (தேற்றான் + விதை) தேற்று'-தல் terru-, 5 செ.குன்றாவி. (v.t.) 1. தெளிவித்த ல்; to make clear, convince, assure, relieve from doubt. "தையால் தேறெனத் தேற்றி" (கலித். 144). 2. தெளிந்தறிதல்; to know, understand."இரத்தலும் ஈதலே போலும் காத்தல் கனவிலுந் தேற்றாதார் மாட்டு” (குறள், 1054). 3. சூளுறுதல்; to swear, take an oath. "தேரோடுந் தேற்றிய பாகன்” (கலித் 712 4. தேற்றாவிதையால் நீர்தெளியச் செய்தல்; to clear, clarify, as with terra-i-kottai. “தேற்றுவித்தாற் புனல் தேற்றுநர்போல்" (அஷ்டப். அழகாகலம், 85). 5. தூய்மை செய்தல்; to refine. 6. ஆற்றுதல்; to comfort, consolc. 7. வலுவுண்டாக்குதல்; to communicate strength; to nourish, cherish, invigoratc. 8. துணிவேற்றுதல் (இவ.); to encourage, hearten. 9. குணமாக்குதல்; to cure, give relief. ம. தேற்றுக (தெள் - தெரி - தேர் – தேறு = தெளிவு. தேறுதல் = தெளிதல். தேறு – தேற்று (முதா, 1450] தேற்று' terru-,பெ. {n.) 1. தெளிவிக்கை ; making clear. 2. தெளிவு; becoming clear, "செஞ்சொற் பொருளின் றேற்றறிந் தேனே" (சிவப் பிரம். நால்வர். 281, 3. தேற்றா (பிங்.); cleaning-nut tree. "தேற்றின் வித்திற் கலிங்குநீர் தெளிவ தென்ன” (ஞானவா. தாமவியா. 3). [தெள் – தெரி – தேறு – தேற்று (முதா. 145] தேற்றுகம் texugam, பெ. {n.) இலவு; silk cotton (சாஅக.). தேற்று மருந்து terru-marundu, பெ. (n.) உடம்பை வலுப்படுத்தும் மருந்து; any in vigorating specific-tonic (சா.அக.). [தேற்றும் + மருந்து தேற்றுமாடு terru-madu, பெ. (n.) உணவு முதலியவற்றால் உடலைத் தேற்றி விற்கும் மாடு (இ.வ.); bull or cow fattened or soiled for sale.) [தேற்றும் + மாடு தேற்றேகாரம் terre-karam, பெ. {n.) உறுதிப்பாட்டினையுணர்த்துமேகாரம் (குறள், 261, உரை ); the particle'e' expressing emphasis or certainty. [தேற்றம் + ஏகாரம்) தேற tera, வி.எ. (adv.) கடைபோக; thoroughly. தேற உசால வேண்டும். (தேறு – தேற] தேறகம் teragam, பெ. (n.) தேரகம் பார்க்க; see teragam. [தேரகம் – தேறகம்) தேறம் teram, பெ. (n.) மிகுதியாயிருப்பது; that which cxceeds. ஒரு கல் தொலைவுக்குத் தேறமாயிருக்கும் (செ.அக.). [தேற்றம் – தேறம்]