பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேறல் 103 தேறு தேறல் teral, பெ. (n.) 1. தெளிவு (பிங்.); clearness. 2. தெளிந்த கள்; pure, clarificd toddy. "தேக்கட் டேறல்" (புறநா. IS), 3. தேன்; honey. "மலர்த்தேற லூறலின்" (தேவா. 94, 3), 4. சாறு; clarified juice. "ஆனெயைக் கரும்பினின் றேறலை" (திருவாச. 5.' 38) (செ.அக.), ம. தேறல்; க. தேட, தேடெ; தெ. தேட து. தேடு [தேறு – தேறல் தேறலர் teralar, பெ. (n.) தேறார் பார்க்க; see terar: [தேறு + அல் + அர். 'அல்' எதிர்மறை இடைநிலை) : தேறலார் teralai; பெ. {n.) தேறார் பார்க்க; see terair. "தேறலார் தமைத் தேறலும்" (பாரத, சூது. 72) [தேறு + அல் + ஆர். 'அல்' எதிர்மறை இடைநிலை) தேறாங்குனி terariguni, பெ. (n.) பெரிய நெத்திலி மீன்; anchovy fish. தேறார் terar, பெ. (n.) 1. பகைவர்; enemies. 2. அறியாதார்; ignorant person. [தேறு + ஆ + ஆர் – தேறார். 'ஆ' எதிர்மறை இடைநிலை புணர்ந்து தேறு'-தல் terur, 5 செ.கு.வி. (v.i.} 1. தெளிதல்; to be acccpted as truc. "ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப்படும்" (குறள், 589). 2. நீர் தெளிதல்; to be clarified, made clear, as water. "தேறுநீர் சடைக்கரந்து” (கலித், கடவுள் வாழ்). 3. மயக்கத் தெளிதல்; to be strengthened; to be recover from swooning, from intoxication or from drooping. 4. முதிர்த ல்; to be thorough, accomplished, mature, as the mind, to reach perfection. “தேறின அறிவு" (வின்.). 5. செழித்த ல்; to thrive, improve, flourish, as vegetation. “தேறின பயிர்" (வின்.). 6. ஆறுதல்; to be comforted, consoled, solaced, soothed. 7. துணிவு கொள்ளுதல்; to cheerup, take courage. 8. தேர்ச்சியடைதல்; to be successful inexamination. தேர்வில் தேறினான். 9. சொல் நிறைவேறுதல் (பலித்தல்); to prove; to result, amount to, as profit; to turn out. அந்த வணிகத்தில் இவ்வளவு வரும்படி தேறும். 10. சோறு முதலியன விறைத்தல் (வின்.); to become stiff, hard, as boiled rice, fruits. 11. தங்குதல் (வின்.); to stay, abide. ம. தேறுக; க. தேட, தேடெ தெ. தேறு; து. தேரு; கோத. தோ தேறு'-தல் teru-,5 செகுன்றாவி. (v.t.) 1. நம்புதல்; to trust, confide in, believe. "தேற்றாது செய்வார்களைத் தேறுதல் செவ்வி தன்றால்" (கம்பரா. வாலிவ. 33). 2. துணிதல்; to decide. "தேறுவ தரிது" (கம்பரா. மாயாசீதை. 89). 3. கூடுதல்; to unite with, arive at. "தேறினும் தேறாவிடினும் அழிவின்கட் டேறான் பகாஅன் விடல்" (குறள், 876). தெ. தேறு தேறு' teru, பெ. {n.) 1. தெளிவு; clearness. 2. உறுதி (சூடா.); certainty. 3. தேற்றா பார்க்க; see teya. "மடிந்த தேறு பொடிந்தவேல்" (கலின். 65). 4. தேற்றாங்கொட்டை பார்க்க ; see terrangottai. "தேறுபடு சின்னீர் போல" (மணிமே. 23:142) [தெள் – தெரி – தேர் – தேறு = தெளிவு. தேறுதல் = தெளிதல். தேறு - நீரைத் தெளிவிக்கும் தேற்றாங்கொட்டை (முதா . 145 தேறினகட்டை terigakatrai, பெ. (n.) தேறினவன் பார்க்க ; see terinavan. (தேறு – தேறின + கட்டை ) தேறினகாய் terinakay, பெ. (n.) முற்றின காய்; mature green fruit. [தேது — தேறின + காய் தேறினர் teriyar; பெ. (n.) ஆராய்ந்து கொண்ட நண்ப ர்; tested or tried friends. "தேறினர்த் தேறலாமையும்" (பாரத சூது. 72. [தேறு – தேறினர்) தேறினவன் terinavan, பெ. (n.) 1. பட்ட றிவு மிக்க வன்; person of experience. 2. கலை முதலியவற்றில் தேர்ச்சி பெற்றவன்; onc well versed in an art; an adept. [தேறு – தேறினவன்)