பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தை 112 தை பகுக்கப்பட்டுள்ளன. இவையே ஓரைகள் எனப்படுகின்றன. இப்பன்னிரு ஓரைகளிலும் இருபத்தேழு விண்மீன்களும் அடங்கியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இரண்டேகால் விண்மீன்கள் இடம்பெறுகின்றன. ஓரைகள் கோள்வீடுகள் என்று குறிப்பிடப்படுகின்றன. கோள் வீடு - இராசி.) கதிரவன் வானமண்டிலத்தைச் சுற்றிவரும் கால அளவைப் பன்னிரண்டு பிரிவாக்கி யுள்ளமையால் அவை ஒவ்வொன்றிலும் கதிரவன் இடம்பெறுவது நோக்கிப் பன்னிரு மாதங்கள் பகுக்கப்பட்டன. கதிரவன் ஒவ்வொரு ஓரையிலும் இடம் பெறும் கால அளவே ஒரு மாதம் ஆகும். இம்மாதங்கள் தனித்தனிச் சில நாழிகை ஏறத்தாழ இருபத்தொன்பது முதல் முப்பத்திரண்டு நாட்கள் வரையுள்ள கால அளவாம். இந்த அளவு எக்காலத்தும் ஒரே நிலையாக இருக்கும். ஆகவே ஓரைகளின் பெயர்களையொட்டியே மாதங்களின் பெயர்களும் அமைந்தன. கதிரவனும் நீள்வட்டப்பாதையும் நிலையானவை. நிலவுலகம் கதிரவனைச் சுற்றி வரும்போது கதிரவனை நோக்கி அதன் பின்புறம் மறையும் ஓரையை நாம் அம்மாதமாகக் குறிக்கின்றோம். ஓரைகள் அவற்றின் தோற்றத்தைப் பொறுத்து ஒப்புமை வகையில் பெயர் பெற்றிருக்கின்றன. ஆடு, காளை, இருவர், நண்டு, அரிமா, கன்னி, நிறைகோல், தேள், வில், சுறா, குடம், மீன் ஆகியவற்றினைப் போன்று வடிவ அமைப்புடைமையால் ஓரைகள் முறையே மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலாம், நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் என்று பெயர் பெற்றன. இப்பன்னிரு ஓரைகளும் மாதத்திற்கு ஒன்றாகக் கதிரவன்பின் மறைந்து கால வேறுபாட்டைக் காட்டுகின்றன. அன்றாடம் காலையில் கதிரவன் தோன்றுவதற்கு முன்னும், மாலையில் கதிரவன் மறைந்த பின்னும் முதன்முதலில் வானில் தோன்றும் விண்மீன் கூட்டமே அன்று பகலில் கதிரவன் பின்னால் மறைந்த விண்மீன் கூட்டமாகும். இதைக் கொண்டே அம்மாதத்தின் பெயர் அமைகிறது. மகரம் என்பது சுறாமீனைக் குறிக்கும் வடசொல் சுறாவின் வடிவில் விளங்கும் ஓரை சுறவம். இதுவே வடமொழியில் மகரராசி எனப்படுகிறது. குத்தல் உணர்ச்சியைக் குறிக்கும் 'சுள்' என்னும் வேர்ச்சொல், சுல் - சுர் - சுரி எனத் திரிந்து அவ்வுணர்ச்சிப் பொருள் அடிப் படையில் சுரி, சூரி, சுணை, சுளுக்கி முதலான பல்வேறு சொற்களைத் தோற்று விக்கிறது. சுறுக்கென்று குத்துவது போற் கடிக்கும் எறும்பு சுள்ளான். கூரிய செதிலால் வெட்டுங் கடல் மீன் சுறா. சுறா - சுறவு. சுறவு + அம் = சுறவம். 'அம்' பெருமைப் பெயர் பின்னொட்டு. சுறவவோரையில் (மகர ராசியில்) கதிரவன் தோன்றும் நாள் என்னும் பொருளிலேயே அம்மாத முதல் நாள் (பொங்கல்) மகர சங்கராந்தி எனப்படுகிறது. இச்சுறவ மாதவே தமிழாண்டின் தொடக்கம். நாள் என்பது இயல்பாகக் கதிரவன் தோற்றத்தையே தொடக்சமாகக் கொண்டுள்ளது. கிழமை (வாரம்) என்பதும் கதிரவனிலிருந்தே தொடங்குகின்றது. கிழமையின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமையே. மாதத்தின் தொடக்கமும் கதிரவனையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. கதிரவன் ஓரைக்குள் தங்கிச் செல்லும் காலமே மாதம். ஆதலால் மாதத் தொடக்கம் என்பது கதிரவன் ஓரைக்குள் புகுங்காலமேயாகும். ஆகவே கதிரவனை அடிப்படையாகக் கொண்டே மாதம் தொடங்குகிறது என்பது தெளியப் படும். எனவே, ஆண்டின் தொடக்கமும் கதிரவனின் இயக்கத்தை ஒட்டியதாக இருத்தலே இயற்கை நெறியும் தமிழ் மரபுமாம். கதிரவன் இயக்கம் என்பது கடக (ஆடி) மாதம் முதல் நாள் தொடங்கி தெற்கு நோக்கிச் செல்லும் தென்செலவும் (தட்சணாயணம்), சுறவம் முதல்நாள் தொடங்கி வடக்கு நோக்கிச் செல்லும் வட செலவும் (உத்திராயணம்) என இருவகைப் படும். தமிழ்நாட்டு மக்கள் தாமிருக்கும் தென் திசையிலிருந்து வடசெலவு தொடங்குதலால் அச்சுறவ முதல்நாளையே கதிரவனைப் போற்றியும், பொங்கலிட்டு மகிழ்ந்தும் புதுநாளாகக் கொண்டாடியும் வருகின்றனர்.