பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

AIGN தா, சந்திரசேகரன், இ.ஆய. இயக்குநர் முழக்கூடுதல் பொறுப்பு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சென்னை - 600 008 பதிப்புரை தமிழிலக்கியம் தென்னிந்திய மொழிகளின் இலக்கியக் காலத்தைக் காட்டிலும் பழைமையானது; வடபுல இலக்கியக் காலத்தோடு பொருந்தி நிற்பது; உலகத்தின் மிகப் பழைமையான இலக்கியங்களோடு ஒப்ப வைத்து நோக்கும் தன்மை சான்றது என்றாலும் அஃது எவ்வளவுக் காலப் பழைமையுடையதென்பது இதுகாறும் உணரப்படாமலேயே யுள்ளது. இக்காலப் பழைமையைக் காட்டுவதற்குரிய வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைப்பதில்லை. தொல்பொருள் சான்றுகளும் கல்வெட்டுச் சான்றுகளும் தமிழின் பழைமையை ஈராயிரமாண்டுகள் வரை எடுத்துச் செல்கின்றன. அதற்குமேல் செந்தமிழின் தொல் பழைமையை இலக்கியச் சான்று கொண்டே அறியவியலும்; இன்னும் சிறப்பாகச் சொல்லப்புகின் ‘மொழி' வழியாகவே அறியவொண்ணும். இத்தன்மையைத் தெற்றெனவும், தெளிவாகவும் அறிந்திருந்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் சொல்லாராய்ச்சி மூலமாகவே தமிழின் பழைமையை விளக்கினார். மொழியாராய்ச்சி அதிலும் குறிப்பாகச்சொலலாராய்ச்சிதான் தமிழின் தொன்மையான நிலையைக் காட்டுவதற்கு சிறந்த சான்றாகத் திகழ்கிறது. ஆகையால் சொல்லாராய்ச்சியை மொழி அகழ்வாராய்ச்சி என்று குறித்தார். இன்று கிடைக்கும் கழக இலக்கியங்களெல்லாம் இரண்டாயிரமாண்டுகளுக்குமேல் பழைமையானது என்றும், பழந்தமிழின் பண்பாட்டுப் பதிவாம் தொல்காப்பியம் ஈராயிரத்தைர் நூறாண்டிற்கு மேல் பழைமையானதென்றும் அறிஞர்கள் குறித்துள்ளனர். இவ்விலக்கியங்கள் யாவும் தொடக்க நிலையினதான இலக்கியங்களாக இல்லை. இவை நன்கு வளர்ந்தநிலை இலக்கியங்களாகவே இருக்கின்றன. அவ்வாறாயின் இவற்றிற்கு முன் பெருந்தொகையினவான இலக்கிய இலக்கணங்கள் இம்மொழியில் இருந்திருக்க வேண்டும்.