பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொடரொழுக்கு 140 தொடிசு vowal of the succeeding word as cu in அவனடித்தான் ands in வந்தடித்தான். [தொடர் + எழுத்து) தொடரொழுக்கு todar-olukku, பெ. (n.) தடையில்லாத ஒழுக்கு; uninterrupted or free flow of anything (சாஅக.). [தொடர் + ஒழுக்கு) தொடல் todal, பெ. (n.) தொடரி' பார்க்க; see todari. [தொடு – தொடர் - தொடல்) தொடலவம் todalavam, பெ. (n.) நெட்டி; pith (சாஅக.). தொடலி todali, பெ. (n.) தொடரி' (யாழ்.அக) பார்க்க ; scc todari. [தொடு – தொடரி – தொடலி] தொடலை todalai, பெ. (n.) 1. தொங்கவிடுகை; hanging, suspension. “தொடலை வாளர்" (மதுரைக். 535/ 2. மாலை; garland. “தொடலைக் குறுந்தொடி" (குறள், 1/3S/. 3. மகளிர் விளையாட்டுவகை (திவா.); a girls' game. 4. மணிக்கோவைகளால் தொடுக்கப்பட்ட மேகலை; jewelled girdle. “தொடலை யல்குற் றொடித்தோண் மகளிர்” (புறநா. 339) - [தொடு் தொடல் – தொடலை (வே.க. 251)] தொடவல் todaval, பெ. (n.) மாலை (அக.நி.); garland. [தொடு– தொடவு - தொடவல் வே.க. 25711 | தொடாக்காஞ்சி toda-k-kafji, பெ. (n.) போர்ப் புண்ணுற்ற தன் கணவனைப் பேய் தீண்டுதலை நீக்கிய மனைவி தானுந் தீண்டா திருத்தலைக் கூறும் புறத்துறை (பு.வெ. 4,19); a theme describing the devils being scared away by the ghastly wounds of a warrior lying in the battle field. [தொடு + ஆ + காஞ்சி. 'ஆ' எதிர்மறை இடைநிலை தொடாச்சாதி toda-c-cadi, பெ. (n.) தீண்டாக் குலம்; untouchable caste. மறுவ. கீழ்ச்சாதி (தொடு + ஆ + சாதி. 'ஆ' எதிர்மறை இடைநிலை | தொடாப்பூ toda-p-pi, பெ. (1.) 1. விரிந்த பூ: blossomed flower. 2. பெண்குறி மலர்; கன்னிப்பூ ; an organ of the female genital (சா.அக.). (தொடு + ஆ + பூ. 'ஆ' எதிர்மறை இடைநிலை) தொடி todi, பெ. (n.) 1. வளைவு; curve, bend. “தொடிவளைத் தோளும்" (சிலப். 10:128) 2. கைவளை (பிங்.); bracelet. "குறுந்தொடி கழித்தகைச் சாபம்பற்றி" (புறநா. 771, 3. தோள் வளை; armlct. "நீப்ப நீங்காது வரிள்வரை யமைந்து ... போக்கில் பொலந்தொடி" (நற். 136). 4. வீரவளை ; armlet, warrior's armlet. "வலிகெழு தடக்கை தொடியொடு சுடர்வர" (மதுரைக் 72025. பூண்; ring, ferrule, ornamental knob of an elephant's tusk. “தொடித்தலை விழுத்தண்டூன்றி" (புறநா. 2431, 6, பாறைக் கிணறுகளில் படியாக உதவ வெட்டப்படும் சுற்றுவட்ட ம் (இ.வ.); circular projcctions in stone wells serving as steps.7. பலம் என்னும் பண்டைய எடையளவு; a standard weight. “தொடிப்புழுதி கஃசா வுணக்கின்" (குறள், 103). தொடிசு' todisu, பெ. (n.) கூத்திவைப்பு; illegitimate connections, concubinage [தொடு – தொடுசு – தொடிசு (முதா. 861 தொடிசு' todisu, பெ. (n.) 1. உடந்தை ; support. 2. தொடர்வு; connection. [தொடுக – தொடிசு)