பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொடு 142 தொடு-த்தல் பறவை, விலங்கு, மாந்தன்குலம், மொழி முதலியவற்றிலுள்ள பல ஒப்புமைகளினின்றும், தெற்கே 3000 கல் தொலைவுவரை தமிழர் வதிந்திருக்கலாமென்று தோன்றுகிறது. குமரியாறு கடலில் அமிழ்ந்தது கடைக்கழகக் காலமாதலின், இடைக்கழக நூலாகிய தொல்காப்பியப் பாயிரத்திற் குமரியென்று குறிக்கப்பட்டது குமரியாறேயாகும். இது, “தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம், அது தானும் பனம்பாரனார், "வட வேங்கடந் தென்குமரி" (பாயிரம்) எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறிப் பாயிரஞ் செய்தமையிற் ...... கடலகத்துப் பட்டுக் குமரியாறும் பனை நாட்டோடு கெடுவதற்கு முன்னையதென்பதூஉம்" என்று பேராசிரியர் கூறியதினின்றறியப்படும். ஆகவே, தெற்கில் கடலையெல்லையாகக் கூறும் நூல்களெல்லாம், குமரியமிழ்ந்ததற்குப் பிற்பட்டனவே யாகும். “வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசை யுள்ளிட்டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த நாட்டியல் வழக்கம் ..." எனத் தெற்குக் குமரியன்றிக் கடலெல்லை யாகிய காலத்துச் சிறு காக்கைபாடினியார் செய்த நூல்" என்று பேராசிரியர் கூறியதுங் காண்க (ஒ.மொ . 42-44), தொடு' todu, பெ. (n.) பழுவெலும்பு; collar bone. [தோள் – தொள் – தொடு) தொடு?-தல் todu-, 17 செ.குன்றாவி. (v.t.) 1. தீண்டுதல்; to touch, come in contact with feel or perceive by the touch. "தொடிற்சுடி னல்ல து” (குறள், 1159). 2. பிடித்தல்; to handle, take hold of, use. "தொட்ட மூவிலைச் சூலந் துளக்குவார்" (கந்தபு. வீரபத் 33). 3. பொருந்துதல்; to be connected, united with or joined to. 4. அணிதல்; to put on, as a ring, clothes. "சுறாவே றெழுதிய மோதிரந் தொட்டாள்” (கலித் 84, 231, 5. தோண்டுதல்; to dig, scoop out, excavate. "குணா அது கரைபொரு தொடுகடற் குணக்கும்" (புறநா. 61. குளம் தொட்டு வளம் பெருக்கி (உ.வ.), 6. துளைத்தல்; to pierce through. “உழலை மரத்தைப்போற் றொட்டன வேறு" (கலித். 10617. தொடங்குதல்; to begin. *அன்று தொட்டனங்கனே யாயினான்” (கம்பரா. தாக // 8. செலுத்துதல்; to discharge, as an arrow or other missile. "கடுங்கணைசு டம்மைத் தொட்டனன்" (கந்தபு.சூரபன்மன்வ. 191). 9. உண்ணுதல் (சூடா.); to eat.10, நினைத்தல்; to think. “நின்பெருமுலை மூழ்க வென்னுளத் தினிற் றொடாமுன்" (கல்லா. 52, 51. 11. இசைக் கருவி இசைத்தல்; to play, as a musical instrument; to beat, as a drum. "கலித்த வியவ ரியந்தொட்டன்ன" (மதுரைக். 3041.12 கட்டுதல்; to fasten, insert. "கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டு" (புறநா. 77113. அடித்தல்; to strike, beat."ததிமுகாதிகளை நான் தொட்டுத் தருகிறேன்" (ஈடு, 3, 5 பிர. 14. பிழிதல்; lostrain, squeeze out as juice. "நறவுந் தொடுமின்” (புறநா. 262), 15. ஆணையிடுதல்; to swear upon. "தொட்டு விடுத்தே னவனை " (சீவக. 1876). 16. எடுத்தல்; to takeup, lift. "பதுமுகன் சிலை தொட்டானே" (சீவக. 1862), 17. வெளுத்தல்; to wash, as clothes. “இவற்றைத் தொட்டபடி" (ஈடு. 10,5,6218. மகளிரொடு கூடுதல் (இவ); to have intercourse. 19. செருப்ப ணிதல்; to wear, as shoes. “பாதஞ் சேரத்தொடு நீடுசெருப்பு” (பெரியபு. கண்ண ப்ப . 62) [தள் – தொள் - தொடு தொடுதல் (அல்லது முட்டுதல்) என்பது, உள்ளிருந்து தொடுதல் வெளியிருந்து தொடுதல் என இருவகைத்து. கருப்பைக் குள்ளிருந்து தாய் வயிற்றைக் குழவிமுட்டுதல் உள்ளிருந்து தொடுதல். தாய் வயிற்றினின்று பிறந்த உயிர்கள் தம்மை அடுத்தவற்றைத் தொடுவது வெளியிலிருந்து தொடுதல், மரத்துள்ளிலிருந்து துளிரும் நிலத் துள்ளிலிருந்து முளையும் முண்டி வருவது போல, தாய் வயிற்றினுள்ளிருந்து குழவியும் முண்டி வெளிவருவது அதற்குத் தோற்றம் (முதா . 154). தொடு-தல் toda-, செ.கு.வி. (v.i.) உண்டாதல்; to occur, happen, come into being. “பழிபாவமுந் தொடுமே” (விநாயகபு. 77, 3! தொடு'-த்தல் todu-, 17 செ.குன்றாவி. (v.t.) 1. இயைத்தல்; to connect, join. 2. விடாது புரிதல்; to frame one after another or weave,