பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொண்டைத்தூறு 155 தொண்டைமண்டலம் தொண்டைத் தூறு tondai-t-turu, பெ. (n.) தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி; 4 disease of throat giving rise to vegetation or fleshy growth of papillac or false membrane (சாஅக.). [தொண்டை + தூறு) தொண்டைதிறத்தல் tondai-tirattal, பெ. (n.) 1. இசைக் குரல் இனிமைப்படுகை; clearing of the throat, becoming clear in tone, as in singing. 2. உரக்கக்கத்துகை; bawling out [தொண்டை + திறத்தல்] தொண்டை நாடு tondai-naidu, பெ. {n.) தொண்டைமண்டலம் பார்க்க; see tondai mandalam. "பேண நீடிய முறையது பெருந் தொண்டை நாடு” (பெரியபு. திருக்குறிப்பு. 4) (செஅக.). [தொண்டை + நாடு) தொண்டைநாளம் tondai-nilam, பெ. (n.) குரல்வ ளை ; wind pipe, larynx. [தொண்டை + நாளம்) தொண்டைநெரி-த்தல் tondai-neri-, 4 செகு.வி. (v.i.) 1. மூச்சு விடாதபடி தொண்டையை அமுக்குதல்; to compress the throat so as to choke. 2. தொண்டை நெரியச் செய்தல்; crush the throat causing fracture (சா.அக.). [தொண்டை + நெரி-.] தொண்டை நோய் tondai-noy, பெ. (n.) தொண்டை தொடர்பான குரல்வளை, காற்றுக் குழாய் முதலிய உறுப்புகளில் ஏற்படும் நோய்கள்; diseases in general of the throat organs such as larynx, trachkea, gullet etc. (சாஅக.). [தொண்டை + நோய்) தொண்டைநோவு tondai-novu, பெ. (n.) 1. தொண்டைக்கட்டு; sore throat, pharyngitis. 2. உள்நாக்கு நோய்; tansilitis. [தொண்டை + நோவு] தொண்டைப்பிடி tondai-p-pidi, பெ. (n.) 1. தொண்டையடைப்பு பார்க்க; see tondai-y- adaippu. 2. கடினமாய் நெருக்குகை; extreme pressure, as for paying a debt. கொடுத்த கடனுக்குத் தொண்டையைப் பிடிக்கிறான். [தொண்டை + பிடி தொண்டைப்புகைச்சல் tondai-p-pugaiccal, பெ. (n.) தொண்டை புகைந்திருமுகை; catarrh, bronchitis, laryngitis, irritation of the throat {செஅக.). (தொண்டை + புகைச்சல்) தொண்டைப்புண் tondai-p-pun, பெ. (n.) தொண்டை உள்ளுறுப்புகளுக்கு ஏற்படும் வேக்காடு, புண், குருதிக்காயம் முதலியன; disease of the throat such as inflammation, soreness ulceration etc., of the internal parts as tonsils, larynx, pharynx, oesphagus etc known as tansilitis, langitis,pharyngitis etc. [தொண்டை + புண்) தொண்டைப்புற்று tondai-p-purru, பெ. (n.) 1. தொண்டக்குள் ஏற்படும் சிலந்தி, புண்கட்டி; cancer of the throat. 2. புற்றைப் போல் தொண்டைக்குள் ஏற்படும் சீழ் கூடிய சதை GUGATTISH; growth of flesh inside the throat (சாஅக.). [தொண்டை + புற்று ] தொண்டைப்பூச்சி tondai-p-picci, பெ. (n.) நெற் பயிரில் விழும் பூச்சி வகை; a paddy pest (செஅக.). [தொண்டை + பூச்சி) தொண்டைமண்டலசதகம் tondai-mandalaSadagam, பெ. (n.) தொண்டை மண்டலத்தின் பெருமைகளைப் பற்றிப் படிக்காகப் புலவர் இயற்றிய நூறகம் (சதகம்); poem of 100 stanzas an Tondaimandalam by Padikkāšu-p-pulavar (செ-அக.). [தொண்டை + மண்டல + சதகம் Qgir GO LUGOT LOL toņdai-maņdalam, பெ. (n.) காஞ்சியைத் தலைநகராகக் கொண்டதும் ஆர்க்காடு, செங்கற்பட்டு, நெல்லூர் மாவட்டங்களை உள்ளடக்கியது மான தமிழகப் பகுதி; an ancient division of the Tamil country, which included the districts