பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 4, PART 3, தெ,தௌ.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தேங்காய்ப்பாரை தேங்காய்மட்டை தேங்காய்ப்பாரை' tengay-p-parai, பெ. {n.) எட்டு விரல நீளம் வளரக்கூடியதும் நீலப்பச்சை நிறமுடையதுமான கள்ளப் பாறை மீன் (மீனவ }; horse-mackcrel, bluish green, attaining 8 inch in length. (தேங்காய் + பாரை) தேங்காய்ப்பால் tengay-p-pal, பெ. (n.) 1. தேங்காய்த் துருவலினின்று பிழிந்த பால்; coconut juice pressed from the scraped kernal. ஆப்பத்தைத் தேங்காய்ப் பாலில் சேர்த்துண்டால் அருமையான சுவை. 2. தேங்காய்த் துருவலினின்று பிழிந்து சருக்கரையிட்டுச் சமைக்கப்படும் பருகம்; a sweet preparation of coconut juice. ம. தேங்காப்பால் (தேங்காய் + பால்] தேங்காய்ப்பாலவியல் tengay-p-pil-aviyal, பெ. (n.) தேங்காய்ப்பாலோடு பல கறிகள் ஒன்று சேர்த்துச் சமைத்த கறிவகை (யாழ்ப்.); a vegetable curry cooked with coconut juice. மறுவ. சொதி (நெல்லை) [தேங்காய் + பால் + அவியல்] தேங்காய்ப்பாறை' tengay-p-parai, பெ. (n.) கடல் பாறை மீனின் வகை; a kind of sca fish of the caranx genus (சாஅக.). (தேங்காய் + பாறை) தேங்காய்ப்பாறை" teigey-p-parai, பெ. (n.) தேங்காய்ப்பூவைக் கொண்டு செய்யப்படும் தின்ப ண்ட ம்; a toffee made by coconut. [தேங்காய் + பாறை தேங்காய்ப்பிண்ணாக்கு tengay-p-pinnakku, பெ. (n.) தேங்காயினின்றும் எண்ணெய் எடுத்த பிறகு எஞ்சிய சக்கை ; the resdue or refuse or oil cake left after extracting the oil from the kernal by a mill (சாஅக.). இது கோழி, புறா, பன்றி போன்றவற்றுக்கு உணவாகவும், தென்னைக்கு எருவாகவும் பயன்படும். ம. தேங்காப்பிண்ணாக்கு [தேங்காய் + பிண்ணாக்கு) தேங்காய்ப்புரிக்கயிறு tengiy-p-puri-k-kairu, பெ (n.) தென்னம் நாரினாலான கயிறு; thread made of coconut fibre. (தேங்காய் + புரி + கயிறு/ தேங்காய்ப்பூ leigay-p-pu, பெ. (n.) 1. தேங்காய் முளை ; the white solid albumen sprouting inside the coconut. 2. தேங்காய்த்துருவல் பார்க்க; see tchgay-t-turuval (சாஅக.). (தேங்காய் + g] தேங்காய்ப்பூக்கீரை terigay-p-pii-kirai, பெ. (n.) தேங்காய்த் துருவல் போலுள்ள பூவைக் கொண்ட கீரைவகை ; a kind of brown spinach, the flowers of which resemble scraped coconut [தேங்காய் + y + கீரை தேங்காய்ப்பூடு tengay-p-pidu, பெ. (n.) அரிசிப்பூடு எனும் செடி; a plant. [தேங்காய் + பூடு] தேங்காய்ப்பூத்துண்டு tengay-p-pi-t-tundu, பெ. (n.) தேங்காய்த் துருவல் போல் மெத்தென்று நெய்த பருத்தித் துண்டு; turkey towel. பேச்சாளர்களுக்குத் தேங்காய்ப்பூத் துண்டு போர்த்தினேன் (உ.வ. தேங்காய்ப்பூநாறி téigay-p-pii-nati, பெ. (n.) தேங்காய்ப்பூக்கீரை (யாழ்.அக.) பார்க்க; see teigay-p-pu-k-kirai. (தேங்காய் + பூ + நாறி) தேங்காய்ப்பூவறை teigay-p-pivarai, பெ. (n.) பால் பிழியப்பட்ட தேங்காய்த் துருவலாற் செய்யப்படும் கறிவகை; a kind of curry prepared from coconut-scrappings whose juice has been pressed out [தேங்காய் + பூவறை தேங்காய்மட்டை teligay-inattai, பெ. (n.) தேங்காயின் மேலிருக்கும் நார்ப்பாகம் - கதம்பை ; coconut fibre and husk (சாஅக.), [தேங்காய் + மட்டை ) தென்னை மட்டை வேறு; தேங்காய் மட்டை வேறு.