பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/15

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிகழ்-தல் கிளவியொடு" (தொல். சொல்.229.). 3. செல்லுதல்; to enter, pass. "செயிர்க்க ணிகழாது" (பு.வெ.8,17). 4. தங்குதல்; to abide, continue, "தொன்மை மேன்மையி னிகழ் பெருந் தொண்டைநன்னாடு" (பெரியபு. திருக்குறிப்பு. 2.). 5. நிறைவேறுதல்; to be performed, transacted, carried on. நிகழ் - தல் niga/-, 4 செ.கு.வி. (vi) 1. விளங்குதல்; to shine. "வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்பட " (பதிற்றுப்.49, 15, உரை.). 2. ஒளி செய்தல்; to emit light, to be resplendent. நிகழ்களன் nigal-ka/ap, பெ. (n.) கதை நாடகம் முதலியன நிகழ்வதாகக் காட்டப்படும் இடம்; scene; setting for a play, etc., போர்க்களத்தை நிகழ்களனாகக் கொண்ட நாடகம். (உ.வ.). [நிகழ் + களன்.] நிகழ்காலம் nigal-kālam, பெ. (n.) வினை நடைபெறுகிற காலம் (தொல்.சொல். 240, இளம்பூ.); தொழில் தொடங்கப் பெற்று முற்றுப் பெறாத நிலைமை (தொல். சொல். 200, சேனா.); present tense. [நிகழ் + காலம்.] தொழிலாவது பொருளினது புடைப் பெயர்ச்சியாகலின் அஃதொருகணம் நிற்பதல்லது இரண்டுகணம் நில்லாமையில் நிகழ்ச்சி யென்பதொன்று அதற்கில்லை. நிகழ்காலவிலக்கு nigal-kāla-vilakku, பெ. (n.) நிகழ்காலம் பற்றிவரும் முன்னவிலக் கென்னும் அணி (தண்டி.42, உரை.) ; a kind of rhetoric signifying the present. [ நிகழ்காலம் + விலக்கு.] நிகழ்ச்சி நிகழ்காலவினையெச்சம் nigal-kāla-vinai-y- eccam, பெ. (n.) அகர ஈறுபெற்று இடைநிலை யோடு கூடாது தானே நிகழ்காலம் காட்டி நிற்குஞ்சொல் (த.சொ.அக.); present verbal participle. எ-டு. [ நிகழ்காலம் + வினையெச்சம். ] வந்திருக்கிறான் - நிகழ்கால நிறைவு. வந்திருப்பான் - எதிர்கால நிறைவு. வந்திருந்தான் - இறந்தகால நிறைவு. வந்து கொண்டிருக்கிறான் - நிகழ்கால நிறைவுத் வந்து கொண்டிருந்தான் வந்து கொண்டிருப்பான் தொடர்ச்சி. இறந்தகால நிறைவுத் தொடர்ச்சி. எதிர்கால நிறைவுத் தொடர்ச்சி. (மொழி.கட்.31.) நிகழ்ச்சி' nigalcci, பெ. (n.) 1. நேர்ச்சி; occurrence, incident, event. 'மூன்று கால நிகழ்ச்சியையும் அறியுமவன்' (பு.வெ. 8, 13, உரை.). 2. நிலைமை; situation. "ஒலி யெழுதற்கஞ்சி நின்ற நிகழ்ச்சியும் போன்ம்" (பரிபா.10:62). 3. செயல்; business. "நினக்கு யான்புரிய நிகழ்ச்சி யாது" (காஞ்சிப்பு. தழுவக்.10.). 4. இக்காலம்; present moment. [ நிகழ் நிகழ்வு → நிகழ்ச்சி. ] நிகழ்ச்சி2 nigalcci, பெ. (n.) ஒளி; light. (த.சொ.அக.). ( நிகர் → நிகழ். ] [ நிகர் = ஒளி. ] நிகழ்ச்சி3 nigalcci, பெ. (n.) வரவு, பெருக்கம்; income, increasing the quantity. "கெழியின்மை கேட்டாலறிக பொருளின் நிகழ்ச்சி யானாக்கம் அறிக” (நான்மணி. 64).