பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/30

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நித்தியசேவனை 19 நித்தியப்பிரளயம்2 நித்தியசேவனை nittiya-Sēvapai, பெ. (n.) | நித்தியப்படி1 nittiya-p-padi, வி.எ.(adv.) நித்திய சேவகம் பார்க்க; see nittiya-sevagam (த.சொ.அக.). [ நித்தியசேவகம் → நித்தியசேவனை.] நித்தியதாநம் nittiya-dānam, பெ. (n.) நித்தியதானம் பார்க்க; see nittiya-danam (த.சொ.அக.). நித்தியதானம் nittiya - dāpam, பெ. (n.) நாடொறுமளிக்குங் கொடை (வின்.); daily alms, gifts, or presents. [ நித்தியம் + தானம்.] நித்தியநட்சத்திரம் nittiya-natcattiram, பெ. (n.) நித்தியவிண்மீன் பார்க்க; see nittiya- viņmin. ( நித்திய+ skt. நட்சத்திரம்} நித்தியநைமித்திகம் nittiya-naimittigam, பெ. (n.) 1. நாட்சடங்கும் சிறப்புச்சடங்கும்; daily and occasional or special ceremonies. 2. பழம் நூல்களால் உருவாக்கப்பட்டதும், கோள்நிலை கண்டு இன்றியமையாது செய்ய வேண்டியதுமான செயல்; any regularly - recurring, occasional duty enjoined by sastras. [ நித்தியம் + skt. நைமித்திகம்.] நித்தியப்பகுவசனம் witiya -pagwasagam. பெ. (n.) 1. பன்மையாகவே வழங்குஞ் சொல்; words used always in the plural as makkal. 2. வசவு (உ.வ.); abusive language. ( நித்தியம் + பகுவசனம்.] நாடோறும்; daily. 'நித்தியப்படிக்குத் தனித்துப்படுத்து" (தனிப்பா. ii, 49, 118.). ( நித்தியம் + படி.) படி = போல. நித்தியப்படி ? nittiya-p-padi, பெ. (n.) நித்தியக் கட்டளை பார்க்க; see nittiya-k-kattalai. நித்தியம் + படி. படி = படியளந்து செய்யும் கட்டளை. நித்தியப்படித்தரம் nittiya-p-padittaram, பெ. (n.) கோயில் நித்தியக்கட்டளை; fixed daily allowance for routine service in a temple. [ நித்தியம் + படித்தரம்.) நித்தியப்படிமோகினி nittiya-p-padi-mögini, பெ. (n.) ஆலயத்திற்கு நாள்தொறும் நிகழ்வுறும் பூசையின் பொருட்டு அரசால் கொடுக்கப்படும் படித்தொகை (ரொக்கம்) (W.G) : allowance in money for daily services in a temple, made by the government. [நித்தியப்படி + skt. மோகினி.] நித்தியப்பிரளயம்' nittiya-p-piralayam, பெ. (n.) 1. உயிர்களின் உறக்க (சுழுத்தி) நிலை (சங்.அக.); (நாள்தோறும் நிகழும் பிரளயம்) lit. daily dissolution; sound sleep. 2. இறப்பு (வின்.); death. [நித்தியம் +skt. பிரளயம்.] நித்தியப்பிரளயம்t wtiya-p-piralayam, பெ. (n.) இடைவிடாத சாவு: continuous death. (த.சொ.அக.).