பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/43

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிமுட்டு-தல் 31 நிமையாட்டம் நிமுட்டு-தல் nimuttu-, 5 செ.குன்றாவி. (v.t.) நிமைத்தடிப்பு nimai-t-tadippu, பெ.(n.) நிமிண்டு-தல் பார்க்க; see nimindu- இமைத் தடிப்பு; the morbid thickening of an eyelid. (நிமிண்டு நிமிட்டு → நிமுட்டு.) நிமேசகம் nimesagam, பெ. (n.) மின்மினிப் பூச்சி; firely glow worm. (சா.அக.). நிமை' nimai, பெ. (n.) இமை; eyelid. 'நீலிக்கு கண்ணீர் நிமையிலே' (பழ.). [இமை→ நிமை.] உம்முதல் = பொருந்துதல், கூடுதல். உம் → அம். அம்முதல் = பொருந்துதல். அம் → அமை. அமைத்தல் = பொருந்துதல். அமை → இமை. இமைத்தல் = கண்மூடுதல் இமை → நிமை. நிமை-த்தல் nimai-, 11 செ. குன்றாவி. (vt) இமைத்தல்; to wink, "புருவநிமிரவிரு கண வாள் நிமைக்க" (திருப்பு.497.). [இமை→ நிமை.] நிமைக்கழலை nimai-k-kalalai, பெ. (n) கண் இமையில் வரும் கட்டி; a tumour in the eyelid-Blepharoneus. (சா.அக.). [நிமை + கழலை.] நிமைகொட்டு-தல் nimai-kottu-, 5 செ.கு.வி. (v.i.) கண் இமை மாறி மாறி வேகமாக மூடவும் திறக்கவும் செய்தல்; to close and open the eye lids alternatively and also repeatedly-nictating. 2. சாடை காட்டுதல்; to have a hint or intimation by the motion of eyelids. (சா.அக.). [நிமை + கொட்டு - ) [நிமை + தடிப்பு.] நிமைதொங்கு-தல் nimai-tongu-, 5 செ.கு.வி. (v.i.) கண்ணிமை செயலற்றுத் தொங்குதல்; droping of the upper eyelid from paralysis (சா.அக.). [நிமை + தொங்கு -.) நிமைமூடு-தல் nimai-mudu- 5 செ.குன்றாவி. (v.t) கண் இமைமூடுதல்; to shutting or closing of the eyelids. (சா.அக.). (நிமை + மூடு -. ] நிமையம் nimaiyam, பெ. (n.) 1. கண்ணிமைப் பொழுது; twinkling of the eye; moment, instant, 2. அறுபது நொடி கொண்ட கால அளவு; minute of time = 1/60 hour. இமை + நிமை → நிமையம்.] நிமையழற்சி nimai-y-alarci, பெ. (n.) கண் இமையிலுண்டாகும் அழற்சி; inflammation of the eyelid .(சா.அக.). [நிமை + அழற்சி. ] நிமையாட்டம் nimai-y-āttam, பெ. (n.) கண் இமையின் ஆட்டம்; consistant movement of the muscles of the eyelid. (சா.அக.). [நிமை + ஆட்டம்.]