பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/47

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிரம்பாத்தாக்கம் 35 நிரம்பினபெண் நிரம்பாத்தூக்கம் nirambā-t-tūkkam, | நிரம்பிப்பாய்-தல் nirampi-p-pāy-, 2 பெ. (n.) அரைத்தூக்கம் (திவா.); unsound. sleep; broken sleep. {நிரம்பு + ஆ + தூக்கம். ஆ-எதிர்மறை இடைநிலை.] நிரம்பாநெறி nirambā-neri, பெ. (n.) கடைபோய் நிரம்பாத குறைவழி; not filled fully. "அரம்போ ழவ்வளை மகளிர் மனத்தின் நிரம்பா நெறியினவாகி யரும் பொருள் கல்லா மாந்த ருள்ளம் போல" (பெருங். உஞ்சை. 50: 10- 13.). நிரம்பாநோக்கு nirambā-ndkku, பெ. (n.) இடுக்கிப் பார்க்கும் பார்வை; look with eyes contracted. "நிரம்பா நோக்கினிரையங் கொண்மார்” (அகநா.67.). {நிரம்பு + ஆ + நோக்கு. ஆ-எதிர்மறை இடைநிலை.) நிரம்பாமென்சொல் nirambā-men-Sol, பெ. (n.) மழலைச் சொல் (திவா.); lisping in- distinct prattle. நிரம்பு + ஆ + மென்சொல். ஆ-எதிர்மறை இடைநிலை.) நிரம்பாமேனி nirambā-meni, பெ. (n.) முற்ற வளராத உடல்; not growth full body. "இரந்தூணி ரம்பா மேனி யொடு விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே” (குறுந்.33). நிரம்பாமொழி nirambā-molj, பெ. (n.) நிரம்பா மென்சொல் பார்க்க (யாழ்.அக.); see nirambā men-šol. நிரம்பு + ஆ + மமாழி. ஆ-எதிர்மறை இடைநிலை.] செ.கு.வி. (v.i.) ததும்பி வழிதல் (வின்.); to over flow. நிரம்பு + பாய்-,] நிரம்பியபுட்பம் nirambiya-putpam, பெ. (n.) நிரம்பிய பூ பார்க்க; see nirambiya-pu. நிரம்பிய + புட்பம்.] skt. புஷ்பம். நிரம்பியபூ nirambiya-pū, பெ. (n.) வாழை (மலை.); plantain. /நிரம்பிய + பூ.) நிரம்பியம் nirambiyam, பெ. (n.) நிரம்பிய பூ பார்க்க (சங்.அக.); see nirambiya- pu. நிரம்பியமரம் nirambiya- maram, பெ. (n.) 1. வாழை மரம்; plantain tree- musa paradisiaca. 2. G66060 LOLD; coconut tree-cocos nuciyerd 3. ஆலமரம்; banyan tree-ficus bengalansis. (சா.அக.). நிரம்பிய + மரம்.] நிரம்பிவழி-தல் nirambi-vali-, 2செ.கு.வி. (vi) அளவுக்கதிகமாக நிறைந்து காணுதல்; over flow, spill over. மண்டபத்தில் உட்கார இடமில்லாமல் கூட்டம் நிரம்பி வழிந்தது. (உ.வ.) பெட்டி ஏற்கனவே நிரம்பி வழிகிறது, இதில் இந்த புத்தகத்தை எப்படி திணிப்பது? (உ.வ.) நிரம்பினபெண் nirambina-pen, பெ. (n.) பூப்பெய்திய பெண் (யாழ்.); girl who has at- tained puperty. [நிரம்பு நிரம்பின + பெண்.]