பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/54

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிரைச்சம் 42 நிரைபூத்தி நிரைச்சம் niraiccam, பெ. (n.) நிரைச்சல், நிரைநிறை nirai-nirai, பெ. (n.) நிரனிறை 1,2 (இ.வ.) பார்க்க; see niraiccal, 1,2. [நிரைச்சல்→ நிரைச்சம்.] நிரைச்சல் niraiccal, பெ. (n.) 1. ஓலை முதலியவற்றாலிடும் அடைப்பு; screen, hedge with stakes covered with plam leaves in regular order. 2. இரவல் (வின்.); loan of articles to be returned. 3. சூதுவிளையாட்டு வகை (யாழ். அக.); a game with squares marked on the ground. 4. படையின் முன்னணி (யாழ். அக.); vanguard. 5. படைவகுப்பு (யாழ்.அக.); disposition or array of an army. க. நெரகே. [நிரை நிரைச்சல். நிரை = கொடிப்படை, கூட்டம், விளையாட்டு.) நிரைசல் niraisal, பெ.(n.) நிரைச்சல், 1 (வின்.) பார்க்க; see niraiccal, [நிரைச்சல்→ நிரைசல்.) நிரைத்தாலி nirai-t-tali, பெ. (n.) ஒரு வகைத்தாலி (சிலப்.121:28.உரை.); a kind of tali. [நிரை + தாலி. நிரை-வரிசை.] நிரைதல் niraidal, பெ. (n.) மறைப்பு; keep out of sight, hide. நிரைந்துகாட்டு-தல் n- செ.குன்றாவி. (v.t) விளக்கிக்கூறுதல் (வின்.); to explain seriatim in detail. [நிரை = நிரப்புதல், வரிசையாதல், முறைப்படுதல். நிரை → நிரைந்து + காட்டு-,] (வின்.) பார்க்க; see niranirai. [நிரல் + நிறை.] நிரைப்பு niraippu, பெ. (n.) ஒழுங்கு (பாண்டி); order. [நிரல் நிரை நிரைப்பு] நிரைபசை niraibašai, பெ. (n.) முற்றியலு கரத்தாலேனும் குற்றியலுகரத்தாலேனும் தொடரப்படும் நிரையசை; a nirai-y-asai fol- lowed by 'u' or shortened 'u'. [நிரை நிரைபு. நிரைபு + அசை.) குறிலிணையும் குறினெடிலும் ஒற்றடுத்தும் ஒற்றடாதும் இணைந் தொலிப்பது நிரையசை. நிரைபு niraibu, பெ. (n.) நிரைபசை (தொல். பொருள்.327. உரை.)பார்க்க; see niraibašai. [நிரை.→ நிரைபு.] நிரைபுலிப்பற்றாலி nirai-puli-p-parrali, பெ. (n.) வலிய புலியின் பற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட தாலி (சிலப்.12:28.உரை.); tali with tiger's teeth. [நிரை + புலிப்பல் + தாலி.] வலிமை வாய்ந்த புலியின் வாயைப் பிளந்து உதிர்த்த பற்களை வரிசையா யமைத்துச் செய்யப்பட்ட தாலி. நிரைபூத்தி niraiputti, பெ. (n.) கோடகசாலை எனும் ஒரு வகைப்பூடு; a very small plant called kõḍagašālai [நிரை + பூத்தி.]