பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/59

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நிலக்கலி நிலக்கலி nila-k-kali, பெ. (n.). பெருங்கட்டுக்கொடி; big broom creeper. (சா.அக.). நிலக்கள்ளி nila-k-kall, பெ. (n.) கள்ளிவகை; green-tubed reddish backed white sepalled torch thistle. [நில் நிலம் = நீர்போல் நீண்டோடாது ஒரேயிடத்தில் நிற்கும் பூதவகை. கள் → கள்ளி = = பாலூறும் திணை. நிலம் + கள்ளி.] நிலைத் நிலக்கறையான் nila-k-karaiyān, பெ. (n) கறையான் வகை (சங்.அக.); the common white ant. (நில் நிலம் = நீர்போல் நீண்டோடாது ஒரேயிடத்தில் நிற்கும் பூதவகை. கல்கர் கரை → கறை. கறையான் அரிப்பது, அரித்துக் கரைப்பது, குறைப்பது. நிலம் + கறையான்.] நிலக்கன்று nila-k-kanru, பெ. (n.) சிறுபயிர் (யாழ்.அக.); tender-crop. [நில் நிலம் = நீரைப்போல் 47 நிலக்காலி முதலியவற்றின் இளநிலைப்பெயர்; யானை, குதிரை, கழுதை, ஆன், எருமை முதலியவற்றின் இளமைப் பெயர்.] [நிலம் + கன்று.] நிலக்கன்னி nila - k - kappi, பெ. (n) 1. நிலம்பு; american bindweed. 2. தாளி; impomea. [நிலம் + கன்னி.] நிலக்காணிக்கை nila-k-kanikkai, பெ. (n.) வரிவகை (தெ.க.தொ.4:39); a kind of tax. [நிலம் + காணிக்கை.] நிலக்காரை nila-k-kārai, பெ. (n) முட்செடிவகை (வின்.); a low thorny shrub. [நிலம் + காரை.] நில் -→நிலம். குல் - குத்தற்கருத்துவேர். குல்கல் → கர் கர்→ கரை= முட்செடி. நீண்டோடாது ஓரிடத்து நிற்பது. கல் நிலக்காலி nila-k-kāli, பெ. (n.) அவுரி; கன் கன்று = மா,புளி,வாழை indigo plant-Indigofera tinctoria. (சா.அக.).