பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலநட்டம் 55 நிலப்படை நிலநட்டம் nila-nattam, பெ. (n.) வேளாண்மை | நிலநெல்லி nila-nelli, பெ. (n.) நெல்லிவகை; செய்யாமையால் உண்டாகும் இழப்பு (இ.வ.); loss on land by allowing it to lie fallow. [நிலம் + நட்டம்.] த. நட்டம். வ. நஷ்டம். நிலநடுக்கம் nila-nadukkam, பெ. (n.) (உள்ளடுக்குகள் நொறுங்கி நகர்வதன் மூலம்) நிலத்தின் மேற்பரப்பு அடையும் அதிர்வு; earth tremor, earthquake. நேற்று சென்னையில் ஏற்பட்ட நிலநடுக்கம் பத்து நொடிகள் நீடித்தது. (உ.வ.). [நிலம் + நடுக்கம்.] நிலநடுக்கோடு nila-nadu-k-kodu, பெ.(n.) இரு முனையங்களிலிருந்தும் நிலப்பந்தைச் சமஅளவில் பிரிக்கக் குறுக்கு வாட்டில் இருப்பதாகக் கொள்ளும் கற்பனைக்கோடு; equator. (நிலம் + நடு + கோடு.) நிலநயம் nila-nayam, பெ. (n.) நிலநலம் பார்க்க; see nila-nalam. [நிலம் + நயம் நலம் நயம்.] a common herb-phyllanthus maderas patensis. ௧.,து. நெலநெல்லி. [நிலம் + நெல்லி.] நிலப்படுகை nila-p-padugai, பெ.(n.) ஆற்றோரத்தமைந்துள்ள நீர்வளம் மிக்க நிலம்; land on the banks of a river fit for culti- vation. [நிலம் + படுகை.] நிலப்படை nila-p-padai, பெ. (n.) (பண்டைக்காலத்திருந்த) நால்வகைப் படையுளொன்றான தரைப்படை; military one among the four divisions; of armed force in olden days. [நிலம் + படை.] பழங் நிலத்தில் ஊர்ந்து சென்று பகைவரைத்தாக்கும் படைவகை. இப்படைவகைப் காலத்திலிருந்து இன்றுவரையுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. நால்வகைப்படைகளாவன: இக்காலம் முற்காலம் 1. நிலப்படை. 1. நிலப்படை. நிலநலம் nila-nalam, பெ. (n) நிலத்தினது 2. நீர்ப்படை. 2. குதிரைப்படை. 156060LD; profit on land. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம் கொடையால் கண்ணீர்மை மாறாக் கருணையால்-பெண்ணீர்மை கற்பழியா ஆற்றல் கடல் சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி. (நல்வழி.16). 3. வான்படை. 3. யானைப்படை. 4. தேர்ப்படை. நாட்டுமக்களையும் தன்னையும் காத்துக் கொள்வதற்கும், தம் பகைவரைத் தெருட்டுதற்கும், ஆளும் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொள்வதற்கும், பயன்படும் வகையில் அமைத்துக்கொள்வது படையாகும்.