பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலப்பாலை நிலப்பாலை nila-p-pālai, பெ. (n.) 1. கும்பம் பாலை; blue dyeing roseberry- wrightia tinetoria 2. ஒழுகு; ground paulay, round leaved discous feather foil- cleistanthus collinus alias amanoa collina. 3. நிலத்தையொட்டிப் படரும் ஒரு செடி வகை; an annual with procumbent branches- Euphorbiahirta. (சா.அக.). [நிலம் + பாலை.] நிலப்பாவாடை nila-p-pāvadai, பெ.(n) நடைபாவாடை (வின்.); cloth spread on the ground to walk on, as in a procession. [நிலம் + பாவாடை.] நில் நிலம் பா = பரவுதல், பாவுதல் பா + ஆடை = பரவும் ஆடை. (n) நிலப்பாளை nila-p-pālai,' பெ. அம்மான்பச்சரிசி (சங்.அக.) பார்க்க; see amman- paccarisi. [நிலம் + பாளை.] நிலப்பாளை2 nila - p - pālai, பெ.(n.) பங்கம்பாளை; Indian worm killer-aristolochia bracteata. (சா.அக.). 57 நிலப்பீர்க்கு நிலப்பிப்பிலி nila-p-pippili, பெ. (n.) ஒரு பூடு; lippia nodiflora. (சா.அக.). [நிலம் + பிப்பிலி. ] நிலப்பிரண்டை nila-p-pirandai, பெ. (n.) ஓரிலைத்தாமரை; one leaf lotus-Londium sufsruticosum. (சா.அக.). [நிலம் + பிரண்டை.] நிலப்பிரபு nila-p-pirabu, பெ. (n.) நிலக்கிழார் பார்க்க; see nila-k-kilār. [நிலம் + பிரபு] நிலப்பிரபுத்துவம் nila-p-pirabuttuvam, பெ. (n.)தனியாள் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கும் முறை; feudal- ism. நிலப்புரபுத்துவக் குமுகாயத்தில் கொத்தடிமை முறையும் இருந்தது. (உ.வ.). [நிலம் + பிரபுத்துவம்.] நிலப்பிரயோசனம் nila-p-pirayöŠanam, பெ. (n.) நிலப்பயன் பார்க்க; see nila-p-payan. [நிலம் + பிரயோசனம்.] நிலப்பிளப்பு nila-p-pilappu, பெ. (n.) நிலம் பலகாலாகப் பிரிதல்; வெடித்தல் (சங்.அக.); crack in the earth. [நிலம்+பிளப்பு. நில் நிலம், பிள் பிள பிளப்பு.] நிலப்பீர்க்கு nila-p-pirkku, பெ. (n) பீர்க்கு வகை; species of luffa.. [நிலம் + பீர்க்கு. நில் நிலம், பிள் பீர்→பீர்க்கு.]