பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலம்பெயர்கை 61 நிலம்பெயர்கை nilam-peyargai, பெ. (n.) | வேற்று நாட்டிற்குச் செல்லுதல்; to go abroad. "நிலம் பெயர்ந்து உரைத்தல் வரைநிலை உரைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய” (தொல்.பொருள்.கற்.28). [நிலம் + பெயர்கை. பெயர் = இடம்மாறுதல். பெயர் பெயர்கை. கை -தொழிற்பெயரீறு.] நிலமக்கள் nila-makkal, பெ. (n.) மண்ணின் மைந்தர்கள்; son of the soil. [நிலம் + மக்கள். ] பழங்காலத் தமிழர்கள் தம் நிலங்களை அதன் தன்மைக்கேற்ப நால்வகையாகப் பிரித்துக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப் பாகுபடுத்தி, அவற்றுள் முல்லையுங்குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்ததைப் பாலையென்றோர் படிவமாக்கி அவ்வந்நிலத்தில் வாழ்வோரை அவ்வந் நிலமக்கள் என்றழைத்தனர்.அந்நிலத்திற் கேற்ப ஒழுக்கத்தையும் புணர்தல், பிரிதல், ஊடல், இருத்தல், இரங்கல்என்ற வகையாக வரையறுத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தினர். இன்றும் அவ்வழக்கந் தொடர்ந்த போதிலும் பண்டிருந்த பண்பாட்டைத் தொலைத்துவிட்டு பண்பாடற்று, வாழும் மாநிலத்திற் கேற்ப மொழிவழிப் பாகுபாடு கொண்டு பகைமேலிட வாழ்கின்றனர். நிலமகள்' nila-maga/, பெ. (n.) சீதா செங்கழுநீர் பார்க்க; see Sidā -ceñigalunir, (சா.அக.). நிலமகள்' nila-maga/, பெ. (n.) நிலமாகிய பெண்; Goddess of earth. "நிலமகளழுத காஞ்சியும்" (புறநா.365.). [நிலம் + மகள். ] நிலமடந்தை நிலமகன் nila-magan, பெ. (n.) (நிலமகளின் மகனான) செவ்வாய் (திவா.); the planet mars, as the son of the earth. [நிலம் + மகன். ] நிலமங்கை nila-marñgai, பெ. (n.) நிலமகள்" (திவ்.பெரியதி.8.4.9.) பார்க்க; see nila-magal. [நிலம் + மங்கை. ] நிலமங்கைநாச்சியார் nilamangai-nācciyār, பெ. (n.) நிலமகள் பார்க்க; see nila-magal. "பெருமாளுக்கும் நிலமங்கைநாச்சியார்க்கும்" (தெ.க.தொ.1:126.). [நிலமங்கை + நாச்சியார் நாய்கன் - தலைவன் நாய்ச்சி - தலைவி நாய்ச்சிநாய்ச்சியார் –நாச்சியார்.] நிலமட்டம் nila-mattam, பெ. (n.) 1. தரைமட்டம்; ground level. 2. நீர்மட்டம் (வின்.); water-level. [நிலம் + மட்டம்.] நிலமடக்கு-தல் nilam-adakku-, 5 செ.கு.வி. (vi) நிலத்துக்குத் தரம் ஏற்படுத்துதல் (தெ.க.தொ.4:142.); to classify arable lands according to quality. [நிலம் + அடக்கு.] நிலமடந்தை nila-madandai, பெ.(n.) நிலமகள்' பார்க்க (திவ்.பெரியதி.4.4.8.); see nila-magal, [நிலம் + மடந்தை.]