பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 6, PART 1, ப,பா.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், முனைவர்.பு.ஏ. இராமையா, இ.ஆ.ப., அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி - பண்பாடு (ம) அறநிலையத் துறை மற்றும் இயக்குநர் (முழுக் கூடுதல் பொறுப்பு) பதிப்புரை மொழி வளர்ச்சியின் அளவுகோல் அகரமுதலி எனில், அது மிகவும் பொருந்தும். ஒரு மொழியில் வெளிவந்துள்ள அகரமுதலிகள், அம்மொழி எந்தெந்தத் துறையில் சொல்வளம் பெற்றுள்ளது என்பதைக் காட்டும் வரலாற்றுப் பெட்டகமாகும். ஒரு மொழியின் சொல்வளத்தைத் தெரிந்து கொள்ளவும், சொற்களின் பொருள் வீச்சைத் துல்லியமாகப் புரிந்து கொள்ளவும் அகரமுதலி உதவுகிறது எனில், அது மிகையன்று. செந்தமிழின் தொன்மையையும், பழமையையும் பறைசாற்றும் நோக்கில், தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் தற்போது ஆறாம் மடலம்-மூன்றாம் பாகத்தை (பெ-பௌ) வெளியிடுகின்றது. இந்நூல் பேரகரமுதலி வெளியீடுகள் வரிசையில் பதினெட்டாவது பகுதியாகும். செந்தமிழ் மீட்பர் தேவநேயப் பாவாணர் அவர்களின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், வேர்ச்சொல் நெறிமுறைக்கு மெருகூட்டும் சொற்கள் இந்நூலில் அழகுறக் காட்டப்பட்டுள்ளன. சான்றாக, பேசு என்ற சொல்லுக்கான மூலத்தைக் காட்டும் வகையைக் காணலாம். பொள் - துளை பொள்ளுதல் - துளைத்தல் பொள் - பொய் (ஒ.நோ.) தொள் - தொய் பொய்தல் - 1 துளைப்படுதல் 2. துளையினின்று ஒழுகுதல் பொய் + பெய் 1. மேலினின்று ஒழுகுதல் 2. வார்த்த ல் 3. சிறுநீர் கழித்தல் பெய் – பேய் (மழை பேய்ந்தும் கெட்டது மழை ஓய்ந்தும் கெட்டது - வழக்கு) பேய் – பேயு – பேசு (ஓ.நோ.) தேய் – தேயு – தேசு பேசுதல் - வான் நீரை ஒழுக விடுவது போன்று வாய்ச்சொல்லை ஒழுகவிடுதல், பெய்தல் என்ற சொல்லுக்கு 16 வகைப் பொருள்களும் அவற்றிற்குரிய இலக்கிய மேற்கோள்களும் இந்தத் தொகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.


2-----