பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

செந்தமிழ் பெட்டகம்

இதில் முதன் முதலாக உரைநடை சமஸ்கிருதம் கையாளப் பட்டது. இந்த உரைநடை சமஸ்கிருதம் பொருள் விளக்கத்திற்கும், அதற்குத்துணையான கதையைச் சொல்லுவதற்கும் முதன்முதலில் பயனாகிறது; இப்படிப்பட்ட பழைய உரைநடை சமஸ்கிருத நூல்கள் வேதத்தின் இரண்டாவது பாகமான பிராமணங்களாகும் (த க) இந்த பிராமணங்களுள் இறுதி பாகத்தை ஆரணியகம் என்று காட்டில் ஓதிவந்தனர். இதன் முடிவில்தான் பரம்பொருளை விளக்கும் உபநிடதம், வேதாந்தம் என்ற ‘மறைமுடி’ இலக்கியம் காணப்படும் ரிக்வேதப் பாக்களிலேயே சமஸ்கிருதச் சொற்களுக்கும் மொழிக்கும் ஆழ்ந்த கருத்துகளையும் உருவற்ற எண்ணங்களையும் விளக்கும் ஆற்றல் நன்கு அமைந்திருந்தது தெளிவாகிறது இவ்வாற்றல் உபநிடதங்களில் (த க) மேலும் நன்கு தெரிகிறது

இந்தப் பரந்த வேத இலக்கியத்தைப் பாதுகாக்கவும், வேள்வி, சடங்கு, ஒழுக்கம் இவற்றிற்குப் பயன்படும் முறையில் இவற்றின் கொள்கைகளைச் சுருக்கி நினைவிற்கு வைத்துக்கொள்ளவும், பரம்பொருளைக் குறித்த தத்துவ ஆராய்ச்சிகளைப் பல துறைகளாக விளக்கவும் சூத்திரங்கள் என்று உரைநடையிலேயே சிறுசிறு சொற்றொடர்களால் ஆன நூல்கள் இயற்றப்பட்டது

இம்மொழியைக் கையாண்ட மக்கள் தமக்குத் தெரிந்த வரலாற்றையும் பிரளயம் முதலிய பெரு நிகழ்ச்சிகளையும் தம்மை ஆண்ட அரசரின் தலைமுறைகளையும், தெய்வம், அரசர் இவர்களின் கதைகளையும், அதிசயச் செயல்களையும் பொதுமக்கள் பேசும் நடையில் அமைந்த இலக்கியத்தில் அமைத்து அவ்வப்போது பாடி வந்தனர் இப்பழங் கதைகளைச் சந்தத்தில் அமைத்தும், அவற்றை வீணையுடன் பாடியும், பாக்களுக்கிடையே உரைநடையில் விளக்கியும் வந்தனர் இப்படி வந்த இதி-ஹ-ஆஸம், புராணம், ஆக்கியானம்,