திருசியம் நாட்டியம் (கதை தழுவி வருவது), நிருத்தியம் அபிநயம்), நிருத்தம் (வெறும் கூத்து) என மூவகைப்படும்
நாட்டியத்தை ரூபகம், உபரூபகம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
ரூபகம் இதில் முக்கிய வகைகள் நாடகம், பிரகரணம், பாணம், பிரஹசனம், நாடிகை
உபரூபகம் : இதில் சுமார் இருபது வகைகள் உண்டு இவை இசையையும் கூத்தையும் தழுவியவை
கட்டுரைகள் : சமஸ்கிருதம்; கத்திய காவியம்; கண்டகாவியம்; சம்பு காவியம்; மகா காவியம் ; அர்த்த சாஸ்திரம்- கெளடில்யர் அர்த்த சாஸ்திரம், ஆகமம்; இதிகாசம், இராமாயம்; வால்மீகி இராமாயணம்; உபநிடதம்; காளிதாசன், கீதை, சங்கிதை, சுக்கிர நீதி : தரிசனங்கள்; தர்ம சாஸ்திரம்; நீதி நூல்கள்; பாரதம்; பாசன், பிராமணங்கள்; புராணம்; வியாகரண சாஸ்திரம்; வேதம் முதலியன முக்கியமான நூல்களுக்கும், ஆசிரியர், முனிவர், அறிஞர்களுக்கும் தனிக்கட்டுரைகள் உண்டு கணிதம், மருத்துவம் முதலான பல சாஸ்திரங்களிலும் நாடகம், சிற்பம் முதலிய கலைகளிலும் சமஸ்கிருத நூல்களின் கருத்துக்களுக்குத் தனிக் கட்டுரைகள் உண்டு
இந்தோ-ஈரானியத்தின் முக்கியப் பிரிவானதும், இந்தோ-ஐரோப்பியத்தின் கிழக்கு எல்லையில் உள்ளதுமான சமஸ்கிருதத்தின் தனிப்பட்ட குடும்பமும், வரலாறும் : வேதமொழி : இது ஆங்காங்கு கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்குத் திசைகளில் மக்கள் பேச்சு வழக்கில் பல வேற்றுமைகள் கொண்டிருந்தது பல்வேறு பட்டமக்கள் பேசிய இந்த மொழியை அறிஞர் இலக்கணத்தால் சீர்திருத்தி, இலக்கியத்தில் ஒரே மாதிரியாகக் கையாண்டனர் அது காப்பிய சமஸ்கிருதம்