பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

செந்தமிழ் பெட்டகம்

'ககார' மாயும், மற்றொன்றில் சீர்க்கார இனமான ‘சகார'மாயும் மாறின, இது நூறு என்னும் எண்ணைக் குறிக்கம் சதம் என்ற சமஸ்கிருதச் சொல்லிலும் மேற்கே ஐரோப்பிய நாட்டிலுள்ள உடன் பிறந்த மொழிகளில் ‘கென்டும்-மொழிகள்' சதம்-மொழிகள்’ என்று பெயரைக் கொடுத்தனர் கிரேக்க - மொழி, கெமொழி, சமஸ்கிருதம் ச-மொழி, 'கென்டும்' மொழிகள் பெரும்பாலும் மேற்கே சென்றவையானாலும் கிழக்கே நின்றவற்றுள்ளும் கென்டும் பிரிவைச் சார்ந்த சில இந்தோ-ஐரோப்பிய மொழிகள் (உம் தொக்காரியன் இருக்கின்றன; அதுபோலவே வெனிட்டிக் என்பது மேற்கே வழங்கிய சதம்-மொழிகளில் ஒன்று

இம்மொழிகளுக்குள்ள உறவை எடுத்துக்காட்டான சில மொழிகளைக் கொண்ட காண்பிக்கலாம் வீடு, வீட்டில் வழங்கும் பொருள், உற்றார் உறவினர் இவற்றைக் குறிக்குஞ் சொற்கள் ஒரு மொழிக்கு அடிப்படையாகையால் அப்படிப்பட்ட சொற்கள் சிலவற்றை இந்த மொழிகளில் ஒப்பிடலாம்

இவற்றுள் ஹிட்டைட்டு என்றதையும் தொக்காரியன் என்றதையும் பிற்காலத்தில் கண்டுபிடித்தனர் சீன துருக்கிஸ்தானத்திலுள்ள பெளத்த ஏடுகளில் தொக்காரியன் கண்டு பிடிக்கப்பட்டது ஹிட்டைட்டு என்ற ஆரியமொழி ஒன்று ஆசியா-மைனரில் கண்டு பிடிக்கப்பட்டமை இந்தோ-ஐரோப்பிய ஆராய்ச்சியில் பிற்காலத்தேற்பட்ட புரட்சிகரமான நிகழ்ச்சியாகும் ஆனட்டோலியாவில் போவாஸ்-காயி என்ற இடத்தில் அகப்பட்ட களிமண் வில்லைகளில் ஏராளமான குறியெழுத்துச் சாசனங்கள் கிடைத்தன. இவற்றிலிருநது இங்கே ஆண்டுவந்த ஹிட்டைட்டு, மிட்டானி என்ற ஆரிய அரசத் தலைமுறைகளின் வரலாறு தெரியவந்தது. இவர்களுக்கு நடுவே ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் ஒன்றில் வேதத்தில் காணப்படும் தெய்வங்களான