பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

125

ஆனால், இந்தியரான சீ வீ வைத்தியா என்பவர் பாரதப்போர் நடந்த காலம் கலியுகத் தொடக்கத்தில் அதாவது கி மு 3000 ஆண்டுகளுக்குமுன் என்கிறார்

ஒரு யுகம் முடிந்து, அடுத்த யுகம் தொடங்கும் காலத்தில் எல்லாத் துறைகளையும் பற்றிய பழக்க வழக்கங்களில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பென்பர் அப்பொழுது மனிதர்கள் மனப்பான்மையிலேயே தீவிரமான முரண்பாடுகள் உண்டாகி, அவற்றின் பயனாக மிகக் கொடும்போர்களும் நிகழ்கின்றன. துவாபரயுகம் முடிந்து கலியுகம் தொடங்கிய காலத்தில் உண்டானதாகச் சொல்லப்படும் பாரதப்போர் அவ்விதப் போர்களில் முக்கியம் பெற்றதாகும் இத்தகைய சமயங்களிலேதான் சிறந்த வீரர்களும் அறிஞர்களும் பிறக்கின்றார்கள் பகவானுடைய அவதாரங்களும் தோன்றுகின்றன

8000 சுலோகங்கள் அடங்கிய மகா பாரதத்தை 18 பருவங்களாக வகுக்கப்பட்டு, செளதி என்ற புராணிகரால் நைமிசாரணியத்தில் வேட்டல் புரிந்து வந்த செளனகர் முதலிய வேதியர்களுக்கு உரையிடப்பட்டதெனச் சொல்லப்படுகின்றது

பெருங் காப்பியத்துக்குரிய எல்லாச் சுவைகளையும் இலக்கணங்களையும் உடையதாயிருப்பதுடன் மனிதர்களுக்கு நல்லறிவு புகட்டும் பகுதிகள் நிறைந்திருப்பதுபற்றி மகா பாரதத்தை ஐந்தாவது வேதமென்பார்கள். எங்குத் தர்மமோ அங்கே ஜயம் என்ற விதி வாய்பாட்டை விளக்குவதால் ஜயம் என்ற மற்றொரு பெயரையும் அவ்விலக்கியம் பெற்றதாம் குருபாண்ட வர்களின் கதையை மட்டிலும் அளவிட்டால் 24,000 சுலோகங்களே கணக்காகுமென்றும், அதுவே பாரதம் என்றும், மகாபாரதமென்பது உபதேசங்களும், உபகதைகளும் சேர்ந்து முன்சொல்லிய தொகையுடையதென்றும் சொல்வர் பாரதம், மகா பாரதம் இவ்விரண்டும் ஒரு காலத்தில் வெவ்வேறு நூல்களாகவே