பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

செந்தமிழ் பெட்டகம்

இருந்து வந்தன என்பதற்கு ஆச்வலாயன க்ருஹ்ய சூத்திரம் என்பதில் சான்று காணப்படுகின்றது

மகாபாரதத்தின் நூலாசிரியராகச் சொல்லப்பட்ட வியாச முனிவரே அதில் தலைமை பூண்டு செயல் புரிகின்றவர்களுக்கும் மூலவராகின்றார் சந்தனு என்ற பாரத மன்னர் மூத்த மனைவியான கங்காதேவியிடத்தில் பீஷ்மரையும், இளைய தாரமான சத்தியவதி என்பவளிடத்தில் விசித்திர வீரியனையும் பெற்றார் விசித்திர வீரியன் இறந்தபிறகு சத்தியவதி தான் கன்னிப் பருவத்தில் இருந்தபோது பராசர முனிவரைச் சேர்ந்து தான் பெற்ற வியாச முனிவரை விசித்திர வீரியன் மனைவியரான அம்பிகை, அம்பாலிகை என்ற இருவர்களிடத்திலும் இரண்டு பிள்ளைகளை உண்டாக்கும்படி சொல்ல, அவரும் அவ்விதமே செய்தார் அவ்வாறு பிறந்தவர்களில் திருதராஷ்டிரன் பிறவிக் குருடன், மற்றொருவன் பாண்டு

காந்தாரியிடமிருந்து திருதராஷ்டிரனுக்குப் பிறந்த துரியோதனன், துச்சாதனன் முதலிய நூறு பிள்ளைகளும் குருக்கள் அல்லது கெளரவர்கள் என்றழைக்கப்பட்டார்கள் பாண்டுவுக்குக் குந்தி தேவியிடத்தில் யுதிஷ்டிரன், பீமன், அருச்சுனன் என்ற மூன்று பிள்ளைகளும் மாத்ரி என்பவளிடத்தில் நகுல சகாதேவர்கள் என்ற இரட்டைப் பிள்ளைகளும் பிறந்தார்கள். இவர்கள் ஐவரும் பஞ்சபாண்டவர்கள் எனப் பெயருடையவர்கள்

குந்திதேவி கன்னிப் பருவத்தில் கதிரவன் அருளால் கன்னன் என்ற மற்றொரு மகனை ஈன்று உலகப்பழிக்கு அஞ்சியவளாய்ப் பெட்டியிலிட்டு யமுனையாற்றில் மிதக்க விட்டாள் அதிரதன் என்ற தேர்ப்பாகன் கன்னனைக் கண்டெடுத்து வளர்த்து வந்தான் கன்னன் கொடையிலும் விற்போரிலும் இணையற்றவனாகி, இயற்கையாயுள்ள கவச குண்டலங்களுடன் விளக்கி னான் தன் பிறப்பையறியாத அவன் துரியோதனனையே உயிர்த் தோழனாகப் பற்றி, பாண்டவர்கள் மீது